இந்த லாக்கை உடைத்தால் 16 கோடி பரிசு - ஆப்பிள் நிறுவனத்தின் செம்ம அறிவிப்பு!
- Get link
- X
- Other Apps
ஆப்பிள் நிறுவனமானது தனது ஐபோன் பயனாளர்களுக்கு "லாக் டவுன் மோட்" என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது.
இந்த புதிய அம்சம் iOS 16 இயங்குதள பதிப்புடன் வருகிறது. இதனிடையில் லாக் டவுன் பயன்முறை என்பது மிகவும் கடுமையான பாதுகாப்பு முறையாகும் எனக்கூறியுள்ளனர்.
இது ஐபோன் பயனர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதாம். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்பிள் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆப்பிளின் லாக்டவுன் பயன்முறை ஆப்பிளின் ஐபோன்கள், ஐபாட்கள், மேக் கணினிகளில் வேலை செய்யும். இந்த அம்சம் ஐபோனில் உள்வரும் இணைப்புகளைத் தடுக்கிறது.
மேலும், ஆப்பிள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜீரோ கிளிக்" ஹேக்கிங் நுட்பங்களிலிருந்து பாதுகாக்க இந்த புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்பைவேர் நிறுவனங்களும் அவசரகாலத்தில் பாதுகாப்பை உடைக்க, பல்வேறு மென்பொருள்களை உருவாக்கி வருகின்றன.
மேலும், இந்த பாதுகாப்பு முறையை உடைக்கும் நபர்களுக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் 16 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ALSO READ : ஆண்களே... இந்த 9 வாசனை திரவியங்களின் மணம் பெண்களுக்கு மிகவும் பிடிக்குமாம்... இன்னைக்கே வாங்கிடுங்க...
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment