நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஆண்களே... இந்த 9 வாசனை திரவியங்களின் மணம் பெண்களுக்கு மிகவும் பிடிக்குமாம்... இன்னைக்கே வாங்கிடுங்க...

 வாசனை திரவியத்தை பயன்படுத்தினால் பெண்கள் மயக்குவார்களா? என்றால் அதற்கான வாய்ப்பு வெறும் 50 சதவீதம் என கூறப்படுகிறது. ஆனால் மீதமுள்ள 50 சதவீத பாசிட்டிவ்வை ஏன் கைவிட வேண்டும்


சென்ட் எனப்படும் வாசனை திரவியத்தை பயன்படுத்தும் ஆண்களை பெண்கள் சுற்றிச் சுற்றி வருவார்கள். வாசனை திரவியத்தை அடித்துக்கொண்டால் பெண்களை மயக்கலாம். எந்த ஒரு வாசனை திரவிய நிறுவனமும் இந்த முறையில் விளம்பரம் செய்யத் தவறுவதில்லை. இப்படி நிறைய நிறுவனங்கள் தங்களுடைய விளம்பரங்களில், பெண்களை கவர்வது பேன்றே உருவாக்கி இருப்பார்கள்.


அப்படி வாசனை திரவியத்தை பயன்படுத்தினால் பெண்கள் மயக்குவார்களா? என்றால் அதற்கான வாய்ப்பு வெறும் 50 சதவீதம் என கூறப்படுகிறது. ஆனால் மீதமுள்ள 50 சதவீத பாசிட்டிவ்வை ஏன் கைவிட வேண்டும் என நினைப்பவர்களுக்காக, ஆண்கள் பயன்படுத்தக்கூடிய 9 வகையான நறுமணங்களை கீழே பட்டியலிட்டுள்ளோம்.


1. மல்லிகை: 
மணம் வீசும் மல்லிகை பூவை விரும்பாதவர்களும் உண்டோ?. மலர்கள் எப்போதுமே தனது நறுமணத்தை இனச்சேர்க்கைக்காக பயன்படுத்துகின்றன. மேலும் மலர்களின் கவர்ச்சிக்கு காரணமாக அவற்றின் நறுமணம் விளங்குகிறது. அப்படி மலர்களிலேயே அதிகம் மணம் வீசும் பூவான மல்லிகை வாசம் கொண்ட சென்ட், ஆண், பெண்ணுக்கு இடையே நெருக்கம் மற்றும் காதலை அதிகரிக்க கூடியது என கூறப்படுகிறது.


2. ரோஜா: 
ரோஜா பூவை பற்றி சிந்தித்தாலே அது காதலர்கள் அன்பை பறிமாறிக்கொள்ள பயன்படுத்துவது தான் நினைவிற்கு வரும். அழகான, தனித்துவமான இந்த மலரின் நறுமணம் கொண்ட வாசனை திரவியங்கள், ஒருவருக்கு ஆழமான மற்றும் தூய்மையான காதல், அன்பு மற்றும் சிற்றின்பத்தை நினைவூட்டுகிறது.


3. கஸ்தூரி:
 ‘மான் வயிற்றில் பிறக்க கூடிய மணம் வீசும் அரிதாரம்’ என கஸ்தூரியை 2000 ஆண்டுகளுக்கு முன்பே நான்மணிக்கடிகையில் நம் முன்னோர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நறுமணம் வீசும் பொருட்களில் முக்கியமான இது சில வகை தாவரங்கள் மூலமாகவும், செயற்கையாகவும் தயாரிக்கப்படுகிறது. கஸ்தூரி வாசம் கொண்ட வாசனை திரவியத்தை பயன்படுத்துவது காமம் மற்றும் ஆசையை அதிகரிக்க உதவுகிறது.


4.சம்பங்கி: 
இந்த பூவில் இப்படியொரு மணமா என நுகர்ந்தோரை மயங்க வைக்கும் மலர் சம்பங்கி. இதன் வாசனையை ஒத்த சென்ட்களை ஆண்கள் பயன்படுத்தினால், அது பெண்களுக்கு அவர்களது சிற்றின்பத்தை நினைவூட்டும் எனக்கூறப்படுகிறது.


5. வெண்ணிலா: 
இந்த மணம் அப்பாவித்தனமும் அன்பும் நிறைந்த, மிகவும் அடிமையாக்கும். மேலும் மண் சார்ந்த மற்றும் அழகான நறுமணமாகும்.


6. சந்தனம்: 
வாசனை திரவியங்கள் பற்றி பேசும் பட்டியலில் சந்தனத்திற்கு கட்டாயம் தனி இடம் உண்டு. மரவகையை சேர்ந்த இதன் கட்டைகளை கல்லில் தேய்ந்தால் அற்புதமான நறுமணத்துடன் கூடிய சாந்து கிடைக்கும். பண்டைய காலங்களில் சந்தனம் நறுமணத்திற்காகவும், அழகிற்காகவும் அரசு பரம்பரையைச் சேர்ந்தவர்களால் பயன்படுத்தப்பட்டது. சந்தனத்தின் நறுமணம் கொண்ட வாசனை திரவியங்களை ஆண்கள் பயன்படுத்துவது அவர்கள் பெண்களை எளிதாக ஈர்க்க உதவுகிறது.


7. கருப்பு அதிமதுரம்:
 இந்த வாசனை ஒருவரின் விழிப்புணர்வை அதிக சதவீதம் வரை அதிகரிக்க உதவும் என்று கூறப்படுகிறது.


8. ஆரஞ்சு:
 ஆரஞ்சு பழத்தை பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. அதன் சுவையை போலவே வாசனையும் பலரையும் கவர்ந்திழுக்க கூடியது. ஆரஞ்சு வாசனை கொண்ட சென்ட் பயன்படுத்தினால், அதன் நறுமணம் பாலுறுப்பிற்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரித்து உணர்ச்சியை தூண்டும் என கூறப்படுகிறது.


9. லாவண்டர்: 
பொதுவாக லாவண்டர் வாசனை மனச்சோர்வு, தூக்கமின்மை, மன அழுத்தம், மன நோய் போன்ற பிரச்சனைகளை தீர்க்க கூடியது. மேலும் இதன் இனிமையான மற்றும் பழ வாசனை ஒரு நொடியில் உங்கள் மனிதனை மாற்றிவிடும் அளவிற்கு சக்தி வாய்ந்தது.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!