நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

முகத்தில் தடவக் கூடாத 5 பொருட்கள்...

பெண்கள் முக அழகை மெருகேற்றுவதற்காக பல்வேறு வழிமுறைகளை கையாளுகிறார்கள். செயற்கை அழகு சாதன பொருட்களின் பயன்பாட்டை குறைத்து விட்டு வீட்டு சமையல் அறையில் இருக்கும் பொருட்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
அவற்றுள் ஒருசில பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்துவதை அறவே தவிர்த்துவிடுவது நல்லது. அது பற்றி பார்ப்போம்.

 1. சூடான நீர்: 

ஒருபோதும் சூடான நீரை கொண்டு சருமத்தை கழுவக்கூடாது. மேலும் சூடான நீரில் இருந்து வெளிப்படும் ஆவியையும் நுகரக்கூடாது. அது முகத்தில் படிந்திருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். அதனால் சருமம் நீரிழப்புக்கு உள்ளாகும். சூடான நீர் சருமத்தின் உணர் திறனையும் பாதிக்கும். சருமத்தை உலர வைப்பதோடு, அதில் படர்ந்திருக்கும் இயற்கை எண்ணெய்த்தன்மையையும் அப்புறப்படுத்தி விடும். அதற்காக குளிர்ந்த நீரை கொண்டு முகத்தை கழுவுவதும் கூடாது. அது சருமத்தை நன்றாக சுத்தம் செய்யாது. குளிர்ந்த நீர் சரும துளைகளை இறுக்கமாக்கிவிடும். மேலும் சருமத்தில் அழுக்குகள் மற்றும் பாக்டீரியாக்களை படரவைத்துவிடும். வெதுவெதுப்பான நீரில் சருமத்தை கழுவுவதுதான் நல்லது. 

2. பற்பசை: 

சிலர் முக பருக்களை போக்குவதற்காக பல் துலக்க பயன்படுத்தப்படும் பற்பசையை உபயோகிக்கிறார்கள். அதில் டிரைக்ளோசன் உள்ளிட்ட ரசாயனங்கள் இடம்பெற்றிருக்கும். சில பற்பசைகளில் ஆல்கஹால்லும் கலந்திருக்கும். அவை சருமத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். சரும அழற்சிக்கும் வித்திடும். காயங்களுக்கும் வழிவகுக்கும். சருமத்தில் திட்டுகள் படர்ந்து கருமை நிறமாக மாறும் நிலையை ஏற்படுத்தும். இதற்கு ஹைப்பர் பிக்மென்டேஷன் என்று பெயர். இந்த பாதிப்பு நேர்ந்தால் சருமம் பாழாகிவிடும்.

3. பேக்கிங் சோடா: 

சிலர் சருமத்திற்கு பொலிவு சேர்ப்பதற்கு பேக்கிங் சோடா பயன்படுத்துவதுண்டு. பொதுவாக இது தீங்கு விளைவிப்பதில்லை என்றாலும், சருமத்தை எரிச்சலூட்டும். பேக்கிங் சோடாவை நேரடியாக சருமத்தில் தடவும்போது எந்த பாதிப்பும் வெளிப்படையாக தெரியாது. சில நிமிடங்கள் கழித்துதான் எதிர்வினை புரிய தொடங்கும். சிலருக்கு சரும வெடிப்பு, சிவத்தல், எரிச்சல் போன்ற பாதிப்புகளை உண்டாக்கும். இதுவும் ஹைப்பர் பிக்மென்டேஷன் பிரச் சினையை உருவாக்கி சருமத்திற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடும். 

4. எலுமிச்சை சாறு: 

எலுமிச்சம்பழ சாற்றை தடவினால் தழும்புகள் குறையும் என்ற கருத்து நிறைய பேரிடம் இருக்கிறது. இதிலிருக்கும் சிட்ரிக் அமிலம் மற்றும் ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலம் போன்றவை சருமத்திற்கு எரிச்சல் ஏற்படுத்தக்கூடியவை. குறிப்பாக வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு அதிக பாதிப்பை உண்டாக்கும். மேலும் ஹைப்பர் பிக்மென்டேஷன் பாதிப்புக்கு வித்திட்டு சருமத்தை கருமையாக்கிவிடக்கூடும்.

 5. ஆப்பிள் சைடர் வினிகர்: 

இதுவும் சருமத்திற்கு எரிச்சலூட்டும் அமிலம் கொண்டது. இது சருமத்தில்காயங்கள், வடு, தழும்புகள், அதிக நிறமி, கருமை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்