இந்த கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டால் கிடைக்கும் தொடர்ச்சியான நன்மைகள்!
- Get link
- X
- Other Apps
மணத்தக்காளி கீரை நமது உடல்நலத்துக்குத் தேவையான மருத்துவ குணங்கள் அனைத்தையும் ஒருசேர கொண்டுள்ளது.
மணத்தக்காளி கீரையில் ஒரு முக்கியமான சிறப்பம்சம் உண்டு. இவர்தான் சாப்பிட வேண்டும், இவர் சாப்பிடக்கூடாது என்ற எந்த கட்டுப்பாடும் கிடையாது. அனைத்து தரப்பினரும் தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
மணத்தக்காளி கீரையை வாரம் இரண்டு முறை அனைவரும் சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லது.
குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என அனைவருக்கும் ஏற்ற உணவுப்பொருளாக திகழ்கிற இக்கீரை, வாய்ப்புண், வயிற்றுப்புண் உட்பட பலவிதமான வயிறு தொடர்பான பிரச்னைகளைக் குணப்படுத்த வல்லது.
உடல் சூட்டைக் குறைக்கும் தன்மை இதற்கு உண்டு. எனவே, அதிக அளவு உடல் சூட்டால் அவதிப்படுபவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
ரத்தசோகை(Anemia) மற்றும் பலவீனமான இதயம் உள்ளவர்கள் இதனுடைய காய்கள், இலைகளைத் தூள் செய்து 100 மில்லி லிட்டர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து, காலை மற்றும் இரவு நேரங்களில் (தூங்கப் போகும் முன்) சாறாக அருந்தி வர இப்பிரச்னைகள் சரி செய்யப்படும்.
மணத்தக்காளி கீரையை வாரம் இரண்டு முறை அனைவரும் சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு, சளித்தொல்லை இருக்காது.
also read : அமினோ அமிலங்கள் உள்ள உணவுகள் எவை? ஏன் அமினோ அமிலங்கள் முக்கியம்?
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment