நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ரஜினி ஸ்டைல் தோசை இப்படித்தான் சுடணும்… மும்பையை கலக்கும் ரசிகர் முத்து வீடியோ.

சூப்பர் ஸ்டார் ரஜினி தோசை தற்போது மும்பை தாதர் பகுதி மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

மும்பை தாத்ரா பகுதியில் ‘முத்து தோசை கார்னர்’ மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இதற்கு, முக்கிய காரணம் கடையின் மாஸ்டர் ‘முத்துவின்’ வேகமும், விறுவிறுப்பும், தொழில் அனுபவமும் தான்.

முத்திவிடம், நீங்கள் ரஜினி ரசிகரா என்று ஒரு வாடிக்கையாளரின் கேள்விக்கு முத்து ஆம் என்று பதிலளித்தார்.


முன்னதாக, ‘பறக்கும் தோசை’ என்ற வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது. தற்போது, முத்துவின் ‘ சூப்பர் ஸ்டார் ரஜினி’ தோசை அதிகம் பேசப்பட்டு வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினி தோசை தற்போது மும்பை தாதர் பகுதி மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. முதன் முறையாக, முகநூலில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இது வரை 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பார்வையிட்டுள்ளனர்.


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!