நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பிரதமர் மோடி நாளை கோவை வருகை : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.

பிரதமர் மோடி நாளை கோவை வருகை : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

அரசு விழா மற்றும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை கோவை மற்றும் புதுச்சேரி வருகை தருகிறார்.

காலை 10.20 மணிக்கு சென்னை வரும் பிரதமர், இங்கிருந்து புதுச்சேரி செல்கிறார். பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, புதிதாக கட்டப்பட்டுள்ள பல்வேறு அரசுக் கட்டடங்களையும் மோடி திறந்து வைக்கிறார். லாசுப்பேட்டை ஹெலிபேடு பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார்.

பிற்பகலில் சென்னை திரும்பும் பிரதமர், இங்கிருந்து கோவை வருகிறார். கொடிசியா வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுகிறார். மாலையில் அங்கு தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

பிரதமர் வருகையையொட்டி கோவை மற்றும் புதுச்சேரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!