குழந்தைகளின் சருமத்தை பாதுகாக்க இதை பின்பற்றுங்கள்..
குழந்தைகளின் தோல் பெரியவர்களின் தோலை விடவும் மிக மென்மையானதாக இருக்கும். இதனால் எளிதில் அவர்களின் தோலில் பாதிப்பு உண்டாக கூடும். குறிப்பாக குளிர் காலங்களில் குழந்தையின் தோல் மிகவும் வறண்டு, ஈரப்பதம் குறைந்து, உலர்வாக இருக்கும். இவ்வாறு இருப்பதால் அலர்ஜி, தோல் எரிச்சல், தோல் வறண்டு காயம் உண்டாதல் போன்ற தோல் சம்பந்தமான பாதிப்புகள் குழந்தைகளுக்கு ஏற்படும். இவற்றை தடுத்து குழந்தையின் தோலை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்து, தோலில் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க குழந்தைநல மருத்துவர்கள் கூறும் இந்த 5 ஸ்கின்கேர் டிப்ஸை தொடர்ந்து செய்து வாருங்கள்.
குழந்தைகளுக்கு பயன்படுத்த கூடிய கிரீம், லோஷன், மசாஜ் ஆயில் போன்ற எதுவாக இருந்தாலும் அவற்றில் ஈரப்பதம் அளிக்கும் மூலப்பொருட்கள் உள்ளதா என்பதை அறிந்து வாங்க வேண்டும். குறிப்பாக வைட்டமின் ஈ, வைட்டமின் பி5, மில்க் புரோட்டீன், ரைஸ் எக்ஸ்ட்ராக்ட்ஸ் போன்ற முக்கிய மூலப்பொருட்கள் அவற்றில் இருக்க வேண்டும். இவை குழந்தையின் தோலுக்கு ஊட்டம் தந்து, மென்மையாக வைக்க உதவும்.
பொதுவாக குழந்தையை அதிக நேரம் குளிக்க வைக்க கூடாது என்பார்கள். சுடு நீரில் அதிக நேரம் குளிக்க வைத்தால் குழந்தையின் தோல் வறண்டு போகும். மேலும் தோலில் உள்ள ஈரப்பதத்தை இது குறைத்து விடும். எனவே குழந்தைக்கு வெதுவெதுப்பான நீரை மட்டும் பயன்படுத்துவது சிறந்தது. குழந்தையின் தோலுக்கு ஏற்ற சரியான pH அளவு கொண்ட பேபி லோஷனை சிறிதளவு பயன்படுத்தலாம்.
குழந்தையை குளிப்பாட்டிய பிறகு அவர்களின் தோலுக்கு ஏற்ற ஈரப்பதத்தை தருவது நல்லது. எனவே குழந்தையின் தோலுக்கு ஏற்ற மாய்சரைஸர் தடவலாம். மில்க் புரொட்டீன்ஸ், ரைஸ் எக்ஸ்ட்ராக்ட்ஸ் கொண்ட சிறந்த பேபி மாய்சரைஸர் பயன்படுத்தினால் குழந்தையின் தோலை எப்போதும் ஈரப்பதத்துடன் வைக்கலாம். மேலும் குழந்தைக்கு பயன்படுத்தும் லோஷனில் வைட்டமின் ஈ, வைட்டமின் பி5 மூலப்பொருட்கள் அதிகம் உள்ளதாக வாங்க வேண்டும். பேபி லோஷன் தடவும்போது அவற்றை குழந்தையின் உடலுக்கு மட்டும் தடவுவது நல்லது. குழந்தையின் கன்னங்கள் விரைவில் வறண்டு போய்விடுவதால் பேபி கிரீமை முகத்தில் தடவலாம்.
குளிர் காலங்களில் குழந்தைக்கு பயன்படுத்தும் டயப்பரால் எரிச்சல் ஏற்பட்டு புண்கள் உண்டாகலாம். எனவே குழந்தைக்கு அடிக்கடி டயப்பரை மாற்ற வேண்டும். தோல் எரிச்சல், தோல் வீக்கம் போன்றவை குழந்தைக்கு வராமல் தடுக்க டயப்பர் பயன்படுத்தும் பகுதியை எப்போதும் சுத்தமாக வைக்க வேண்டும். மேலும் ஆல்கஹால் அற்ற, சோப்பு இல்லாத பேபி வைப்ஸ் பயன்படுத்துவது சிறந்தது. வெட் டயப்பர்களை குறிப்பிட்ட இடைவேளையில் தொடர்ந்து மாற்றுவது குழந்தைக்கு ரேஷசஸ் வராமல் தடுக்கும்.
சில குழந்தைகளின் தோல் ஏற்கனவே வறண்ட நிலையில் காணப்படும். அவர்களின் தோலை குளிர் காலங்களில் கூடுதல் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். எனவே எளிதில் தொற்றுகள் வராமல் தடுக்க மாய்சரைஸர் கிரீம்கள் பயன்படுத்தலாம் என குழந்தைநல மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Comments
Post a Comment