நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நம்_அன்றாட_உணவில்# ஏதாவதொரு_வகையில்,!!!!!🇨🇭#மஞ்சளைச்#சேர்த்துக்கொண்டால்...

🇨🇭#நம்_அன்றாட_உணவில்
#ஏதாவதொரு_வகையில்,!!!!!

🇨🇭#மஞ்சளைச்
#சேர்த்துக்கொண்டால்...

💊மஞ்சள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். 


💊ரத்தச்சோகை பிரச்னையே ஏற்படாது.

💊மஞ்சள் சூரணம் உட்கொண்டால் குடல் நோய் விரைவாகவும், நிரந்தரமாகவும் தீரும்.பச்சை மஞ்சளை அரைத்து, வண்டுக்கடி, சிலந்திக்கடி ஆகியவற்றில் பூசினால், நோய் தீரும்.

💊மஞ்சளைச் சுட்டு எரிக்கும்போது எழும் புகையை மூக்கு வழியாக உள்ளுக்கு இழுத்தால், ஜலதோஷம், கொடிய தலைவலி, தலைக்கனம், தும்மல் போன்றவை குணமாகும்.

💊மஞ்சள் புகையை வாய் வழியாக இழுத்தால், மது போதை விலகும்.மஞ்சளை வறுத்துப் பொடியாக்கி வைத்துக்கொண்டு உடலில் தோன்றும் அனைத்து வகை யான புண்களையும், புரையோடுதலையும் நீக்கிவிடலாம்.

💊மஞ்சளைச் சுட்டு கரியாக்கிய சூரணத்தை உட்கொண்டால், மேகப்புண், தோல் தொடர்பான நோய்கள், விகாரத்தன்மை, அதிசாரக் கழிச்சல் போன்றவை நீங்கும். வாய்வு தொடர்பான மார்புவலி, தலைவலி குணமாகும்.

💊மஞ்சளை நன்றாக அரைத்து, தண்ணீரில் கரைத்துத் தெளிய வைத்து, தெளிந்த நீரை வடித்துவிட்டு, பாத்திரத்தில் தங்கியுள்ள பொடி, திப்பியுடன் அடுப்பில் வைத்து நன்றாக எரித்தால், நீர் சுண்டி உப்பு கிடைக்கும். இந்த உப்பைச் சாப்பிட்டால், குடல் கிருமிகள் வெளியேறி விடும். துர்நாற்றம் நீக்கும்.

💊மஞ்சளில் வேப்பிலை சேர்த்து அரைத்து விட்டால் அனைத்து வகையான நச்சுயிரி (தீ நுண்மம், நுண்ணு யிரிகளையும் அழிக்கும் சக்தியுண்டாகும்.

💊மஞ்சள், வேப்பிலை, வசம்பு சேர்த்து அரைத்து, உடம்பில் பூசிக் கொண்டால் மேகப் புண், மேகப் படைகள், வட்டமான படைகள், நச்சுக்கடிகள் நீங்கும். தினம் அரை கிராம் அளவில் மஞ்சள் பொடி சாப்பிட்டால், வயிற்றுப்புண், வலி நீங்கும். வாதத்தைக் கண்டிக்கும்.

💊மஞ்சளை இலுப்பெண்ணெயில் குழைத்துத் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.

💊மஞ்சளை வேப்ப எண்ணெயில் தோய்த்துக் கொளுத் தினால் புகை வரும். மூக்கு வழியாக உள் இழுத்தால், தலைவலி நீங்கும்.

💊மஞ்சளை நல்லெண்ணெயில் கலந்து கற்பூரம் சேர்த்துக் காய்ச்சி, புண்களுக்குப் போட்டால், விரைவில் ஆறாத புண்கள் ஆறும்.

💊மஞ்சளையும் நெல்லிக்காயையும் 
சம அளவு எடுத்துக்கொண்டு, அதை அரைத்துப் பொடியாக்க வேண்டும். அந்தப் பொடியை, காலை, மாலை என இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சர்க்கரைநோயைத் தடுக்கலாம். 

💊உடலில் அரிப்பு ஏற்பட்டால், மஞ்சளை வேப்பிலையுடன் சேர்த்து அரைத்து, அந்த இடத்தில் தேய்த்துவந்தால், அரிப்பு குணமாகும்.

💊சிலருக்குத் தொடையில் சூடுக்கட்டிகள் ஏற்படும். அரைத்த மஞ்சளை, நல்லெண்ணெயோடு சேர்த்துத் தடவி வந்தால், மெள்ள மெள்ள கட்டி சரியாகும்

💊சருமப் பாதிப்பு இருப்பவர்கள், கஸ்தூரி மஞ்சளோ அல்லது காப்பு மஞ்சளோ உபயோகிப்பது நல்லது. உடலில் ஒவ்வாமை ஏற்பட்டால், ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கும் `ஹரித்ரா காண்டம்’ என்ற மஞ்சளில் தயாரித்த மருந்தை வாங்கித் தடவிவந்தால் பிரச்னை தீரும்.

💊சிலருக்கு மூக்கடைப்பு பிரச்னையால் இரவில் தூக்கம் கெடும். மஞ்சள் கிழங்கை தீயில் சுட்டு, அதிலிருந்து வரும் புகையை நுகர்ந்து பார்த்தால், மூக்கடைப்பு சரியாகும். இந்தச் சிகிச்சையைச் செய்பவர்கள், அடுத்த இரண்டு மணி நேரத்துக்குத் தண்ணீர் குடிக்கக் கூடாது.

💊மஞ்சள், திப்பிலி, ஏலக்காய் மூன்றையும் சம அளவு எடுத்து, பொடியாக்கி, ஒரு டீஸ்பூன் சாப்பிட்டுவந்தால், மஞ்சள்காமாலை குணமாகும். உணவில் தொடர்ந்து மஞ்சளைச் சேர்த்து வந்தால், கல்லீரல் தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கலாம்.

💊மஞ்சளைத் தண்ணீரில் கொதிக்கவிட்டு, கண்களில் ஒத்தடம் கொடுத்தால் 'மெட்ராஸ் ஐ' குணமாகும்.

💊மூட்டுப்பகுதிகளில் வலியோ, வீக்கம் ஏற்பட்டால், மஞ்சளையும் சுண்ணாம்பையும் கலந்து தடவினால், சிறிது சிறிதாகப் பிரச்னை தீரும்.

💊மஞ்சள், குப்பைமேனி இரண்டையும் தேவையான அளவு எடுத்து அரைத்து, பூசிவந்தால், சருமப் பிரச்னைகள் அனைத்தும் சரியாகும்.

💊ஒரு பச்சை மஞ்சள் கிழங்கில், 2 - 9 சதவீதம் குர்குமின் உள்ளது. மஞ்சளை தனியாக சாப்பிடுவதை விட, மிளகுடன் சேர்த்து பயன்படுத்தினால், அதில் உள்ள குர்குமினை முழுமையாக உடல் உறிஞ்சும். குர்குமின் முழுமையாக உடலில் சேர, மிளகு மற்றும் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து சாப்பிடலாம். தினமும், 30 - 75 கிராம் மஞ்சள் சாப்பிட்டால், 2 - 9 சதவீதம் குர்குமின் கிடைக்கும்.

💊சிறிது மஞ்சளுடன் மிளகு, தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்து, உணவிற்கு பின் சாப்பிட்டு வந்தால், மூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கம் நீங்கும். 

💊தோல் வியாதி இருந்தால், மஞ்சளுடன் குப்பைமேனி இலை சேர்த்து அரைத்து, பிரச்னை உள்ள இடத்தில் பூசினால், நல்ல பலனை தரும்.

💊தும்மல், மூக்கடைப்பிற்கு மஞ்சளை தீயில் சுட்டு, அதன் வாசனையை முகர்ந்தால், சரியாவதோடு, ஒற்றைத் தலைவலி குறையும்.

💊மஞ்சளை தேய்த்து குளிப்பதால் தோல் ஆரோக்கியமாக இருக்கும். 

💊பெண்கள் தொடர்ந்து மஞ்சள் சாப்பிடும் போது, மாதவிடாய் பிரச்னைகள், நீர்க்கட்டி வராது. இப்பிரச்னைகள் இருந்தால், விடாமல் மஞ்சளை சாப்பிட்டால், கோளாறு சரியாகி, சீரற்ற மாதவிடாய் சரியாகும்.ஹார்மோன் செயல்பாடும் சீராக அமையும்.

🇨🇭#மஞ்சள்சேர்த்த_பால்🇨🇭

பால் ஆரோக்கியத்துக்கு நல்லது. உங்களுக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லையென்றால் நீங்கள் தேங்காய் அல்லது பாதாம் பாலுடன் மஞ்சள் சேர்க்கலாம். தேன் உங்களுக்கு ஒவ்வாமையை உண்டு செய்வதாக இருந்தால் நீங்கள் அதை தவிர்க்கலாம். இனிப்புக்கு நாட்டுச்சர்க்கரை பயன்படுத்தலாம்.

👉தேவையான பொருட்கள்❓

பால் - 1 கப்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

தேன் - 1 டீஸ்பூன்

இலவங்கப்பட்டை - சிட்டிகை அளவு

மிளகுத்தூள் - 1 சிட்டிகை

இஞ்சி சாறு - கால் டீஸ்பூனில்

பாலை பாத்திரத்தில் சூடேற்றி அனைத்து பொருள்களையும் கலந்து மென்மையாக சூடாக்கவும். அவை கொதிக்க வருவதற்கு முன்கூட்டியே எடுத்து விடவும். தினமும் படுக்கைக்கு செல்வதற்கு முன்பு ஒரு டம்ளர் குடித்து வந்தால் போதுமானது. .

🇨🇭#மஞ்சள்_தேநீர்🇨🇭

மஞ்சள் மற்றும் தேன் தேநீர் தும்மல், மூக்கு ஒழுகுதல், ஒவ்வாமை நாசியழற்சி அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. தேன் ஒவ்வாமை இருப்பவர்கள் தேனை தவிர்த்து நாட்டுச்சர்க்கரை, பனங்கருப்பட்டி சேர்க்கலாம்.

தேவையான பொருட்கள் ❓

தண்ணீர் - 1 கப்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

தேன் - இனிப்புக்கேற்ப

தண்ணீரை கொதிக்க வைத்து அதில் மஞ்சள் தூள் சேர்க்கவும். இவை நன்றாக கலந்ததும் இறக்கி ஆறவைத்து தேன் சேர்த்து வெதுவெதுப்பான சூட்டில் குடித்துவிடவும். தினமும் இரண்டு வேளை இதை குடித்து வரலாம். 



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்