நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பூமியில் தங்கம் தோன்றியது எப்படி? ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!

 விண்கற்கள் வெடிப்பு காரணமாக இத்தகைய தனிமங்கள் தோன்றியிருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், பேரழிவு நிகழ்வுகள் மூலம் கன தனிமங்களான தங்கம் மற்றும் யுரேனியம் போன்றவை உருவாகி இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்கம் போன்ற தனிமங்கள் உருவாகிய விதம் குறித்த ஆய்வுகள் நடைபெற்று வரும் நிலையில், விண்கற்கள் வெடிப்பு காரணமாக இத்தகைய தனிமங்கள் தோன்றியிருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் இருக்கும் பிளாக் ஹோல் என்று கூறப்படும் ‘கருந்துளை’ பகுதியிலிருந்து பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இது போன்ற தனிமங்கள் பூமியில் உருவாகி இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கருந்துளை:

கருந்துளையில் இருக்கும் அடர்த்தியான மற்றும் அதீத சூடான பொருட்கள் காரணமாக இரண்டு மிகப்பெரிய நியூட்ரான் நட்சத்திரங்கள் மோதல் ஏற்பட்டு தனிமங்கள் போன்ற பொருட்கள் பூமியில் தோன்றியிருக்கலாம். புவியீர்ப்பு அலைகள் மற்றும் மின்காந்த அலைகள் குறித்து கண்காணித்ததில், அண்டத்தில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக இந்த தனிமங்கள் தோன்றியிருக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனினும்,  இது போன்ற தனிமங்கள் ‘எப்போது’ ‘ஏன்’ வெளிவந்தன, அல்லது வேறு ஏதேனும் நிகழ்வுகள் காரணமாக இந்த தனிமங்கள் தோன்றியிருக்குமா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கணிணி உருவகப்படுத்துதல்:

ஜெர்மன், பெல்ஜியம் மற்றும் ஜப்பான் நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கன தனிமங்கள் எப்படி பிளாக் ஹோலில் இருந்து தோன்றியுள்ளன என்பதை கணிணி மூலமாக உருவகப்படுத்தி காட்டியுள்ளனர்.

இந்த ஆராய்ச்சி குறித்து வான் இயற்பியல் குழுவைச் சேர்ந்த முனைவர் ஆலிவர் கூறியதாவது, 

“நாங்கள் ஆராய்ச்சிக்காக, கணிணையை பயன்படுத்தி உருவகப்படுத்துதல் மேற்கொண்டோம். அதில், சில செயல் மாறுபாடுகள் நிகழும் வரை நியூட்ரான்கள் அதிக அளவில் தட்டுகளில் இருந்தன. இந்த ஆய்வில் புரோட்டான்களும் நியூட்ரான்களாக மாறியுள்ளன. இதன்மூலம், நியூட்ரான் நட்சத்திரங்கள் மோதல் ஏற்பட்டு தனிமங்கள் தோன்றியிருக்கலாம் என்பது தெளிவாகி உள்ளது.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆன்ட்டிபுரோட்டான் மற்றும் அயான் ஆராய்ச்சி கூடம் தற்போது கட்டுமான நிலையில் உள்ளது. இது போன்ற ஆய்வுக் கூடங்களில் தனிமங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளலாம். அதன்மூலம், கன தனிமங்கள் எவ்வாறு உருவாகின என்பதை துல்லியமாக கண்டுபிடிக்க இயலும்.

மேற்கண்ட ஆய்வு, ராயல் அஸ்ட்ரானமிக்கல் சொசைட்டியின் மாதாந்திர இதழில் வெளியிடப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்