நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஹூவர் அணை மீது காற்றில் மிதக்கும் பொருட்கள்; புவிஈர்ப்பு விசை தோற்றுப் போவது ஏன்..!!

 புவிஈர்ப்பு வேலை செய்யாத இடம் ஒன்று பூமியில் உள்ளது என்பதை அறிந்தால், ஆச்சர்யமாக இருக்கிறதா. ஆம் இங்கே, உயரத்தில் இருந்து ஒரு வீசப்படும் பொருட்கள் மிதப்பதைப் பார்த்து விஞ்ஞானிகளும் ஆச்சரியமடைந்துள்ளனர்.


விண்வெளியில், புவிஈர்ப்பு விசை இல்லாததால் பொருட்கள் காற்றில் மிதக்கும் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால், பூமியில் ஈர்ப்பு விசை இல்லாத இடம் ஒன்றைபற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இங்கு உயரத்தில் இருந்து எதையாவது தூக்கி எறியும்போது அது தரையில் விழாமல் காற்றில் மிதக்க தொடங்குகிறது. விஞ்ஞானிகளும் இப்படி ஒரு சம்பவத்தை கண்டு வியந்துள்ளனர்.

புவிஈர்ப்பு இங்கே வேலை செய்யவில்லை!

புவிஈர்ப்பு வேலை செய்யாத அந்த அதிசய  இடம் அமெரிக்காவில் இருக்கிறது. ஆம், அமெரிக்காவின் ஹூவர் அணை தான் அந்த அதிசய இடம். கொலராடோ ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஹூவர் அணை அமெரிக்காவின் (America) நெவாடா மற்றும் அரிசோனா மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. ஹூவர் அணையின் அமைப்பின் காரணமாக, புவி ஈர்ப்பு விசை வேலை செய்யாமல் இங்குள்ள பொருட்கள் காற்றில் மிதக்கத் தொடங்குகின்றன.

பொருட்கள் காற்றில் மிதப்பதன் காரணம்

உதாரணத்திற்கு, யாராவது ஒருவர் பாட்டிலில் உள்ள தண்ணீரை ஹூவர் அணைக்கு மேலே வீசி ஊற்றினால், தண்ணீர் காற்றில் பறக்கத் தொடங்குகிறது. ஹூவர் அணையின் அமைப்பே இதற்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றன. ஹூவர் அணையின் உயரம் மற்றும் அதன் வில் வடிவம் காரணமாக, இங்குள்ள காற்று அணையின் சுவரைத் தாக்கி கீழே இருந்து மேலே செல்கிறது. அதனால்தான் ஹூவர் அணையில் வீசப்படும் பொருட்கள் தரையில் விழாமல் காற்றில் பறக்கத் தொடங்குகின்றன.

ஹூவர் அணையின் உயரம் 

ஹூவர் அணையின் உயரம் 726 அடி. ஹூவர் அணையின் அடிப்பகுதியின் தடிமன் 660 அடி, இது இரண்டு கால்பந்து மைதானங்களுக்கு சமம். ஹூவர் அணை கட்டப்பட்ட கொலராடோ நதி என்று பெயரிடப்பட்டது, அதன் நீளம் 2334 கிலோமீட்டர்.

ஹூவர் அணை 1931 மற்றும் 1936 க்கு இடையில் அமெரிக்காவில் கட்டப்பட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஹூவர் அணை அமெரிக்காவின் 31வது ஜனாதிபதியான ஹெர்பர்ட் ஹூவரின் நினைவாக பெயரிடப்பட்டது.


also read : பகீர் தகவல்! பல பேரை காவு வாங்கிய உலகின் மர்மமான ‘தற்கொலை காடு’..!!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்