நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பகீர் தகவல்! பல பேரை காவு வாங்கிய உலகின் மர்மமான ‘தற்கொலை காடு’..!!

தற்கொலை காடு என அழைக்கப்படும் மர்ம காடு ஜப்பானில் அமைந்துள்ளது இந்தக் காட்டின் பெயர் 'ஒகிகஹாரா'. 


 உலகம் எண்ணற்ற ரகசியங்களாலும் மர்மங்களாலும் நிறைந்துள்ளது. பெரும்பாலான மர்மங்களை, மனிதர்கள் மட்டுமல்ல, விஞ்ஞானிகளும் கூட புரிந்து கொள்ள முடியவில்லை . அப்படிப்பட்ட ஒரு மர்மமான காடு, ஜப்பானில் அமைந்துள்ளது. இந்தக் காட்டின் பெயர் 'அகிகஹாரா தற்கொலைக் காடு' (Aokigahara Suicide Forest). இங்கு வரும் அனைவரும் தற்கொலை செய்து கொள்வதாக இந்த வனத்தைப் பற்றி கூறப்படுகிறது. இதனால் இந்த காடு 'தற்கொலை காடு' என அழைக்கப்படுகிறது.

மர்மம் நிறைந்த காடு

பசுமையான மற்றும் அழகாக தோற்றமளிக்கும் காடு உலகம் முழுவதும் திகில் கதைகளுக்காக அறியப்படுகிறது. இது உலகின் மிகவும் பிரபலமான தற்கொலை இடங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது இதில் கோல்டன் கேட் முதலிடத்தில் உள்ளது. டோக்கியோவிலிருந்து இந்த மர்ம வனத்தின் தூரம் இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான பயண தூரத்தில் உள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் இங்கு வந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வனத்தின் மர்மம் (Mystery Story) பயமுறுத்தும் வகையில் உள்ளது. 

தற்கொலையை தூண்டும் பேய்கள் 

இந்த காட்டில் பேய்கள் இருப்பதாக ஜப்பான் மக்கள் நம்புகிறார்கள். அதே பேய்கள் மக்களை தற்கொலைக்கு தூண்டுகின்றன. இந்தக் காட்டுக்குள் நுழையும் இடத்தில் கீழ்கண்ட எச்சரிக்கையைப் படிக்கலாம். 


உங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தைப் பற்றி கவனமாக சிந்தியுங்கள்.

உங்கள் வாழ்க்கை உங்கள் பெற்றோர் கொடுத்த விலைமதிப்பற்ற பரிசு.


போனால் திரும்பி வராத உயிர்

இந்த காடு பியூஜி மலையின் வடமேற்கில் அமைந்துள்ளது. இது 35 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது. இந்த காடு மிகவும் அடர்த்தியானது. இது 'மரங்களின் கடல்' என்று அழைக்கப்படுகிறது. இந்த அடர்ந்த காட்டில் ஒரு முறை தொலைந்து போனால், இங்கிருந்து வெளியே வருவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. பலர் தற்கொலை (Suicide) செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 2003 முதல் இந்த காட்டில் 105 க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என அதிகாரபூர்வ தகவல்கள் கிடைக்கின்றன. இந்த சடலங்களில் பெரும்பாலானவை மோசமாக சிதைந்து காணப்பட்டன. சிலவற்றை காட்டு விலங்குகள் தின்றுவிட்டன.

அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதால் வழிதவறிச் செல்லும் மக்கள் பயந்து உயிரை மாய்த்துக் கொள்வதாக கூறப்படுகிறது. இந்த காட்டில் compass needle என்னும் திசை காட்டும் ஊசி அல்லது மொபைல் போன்ற கருவிகள் வேலை செய்யாது. Compass Needle இங்கே சரியான பாதையைக் காட்டாது. காடுகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் காட்டில் இருந்து இரவில் அலறல் சத்தம் கேட்பதாக கூறுகின்றனர். இந்தக் காட்டில் உள்ள பல மரங்கள் முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமையானவை என்பது குறிப்பிடத்தக்கது.



also read : காண்டாமிருக கொம்பின் NFT படம் 7000 டொலருக்கு ஏலம் போன அதிசயம்!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்