நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இத விட ஒரு கியூட் வீடியோவ பார்த்திருக்க முடியாது, குழந்தைக்கு குருவாகிய நாய்

 இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு குட்டி நாய் ஒரு குழந்தைக்கு தவழக் கற்றுக்கொடுக்கின்றது. 


இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. 

சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள்  இணையத்தை கலக்கி வருகின்றன. அந்த வகையில் தற்போது ஒரு நாய் மற்றும் ஒரு குழந்தையின் வீடியோ வைரல் ஆகி வருகின்றது. 

நாய்கள் கடவுளின் அழகான படைப்புகளில் ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை. நாய்கள் நன்றியுடையவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அவை மனிதர்களுக்கு மிகவும் உதவியாகவும் உள்ளன.

தற்போது இணையத்தில் வைரலாகி  வரும் ஒரு வீடியோவில், ஒரு குட்டி நாய் ஒரு குழந்தைக்கு தவழக் கற்றுக்கொடுக்கின்றது. ஆம்!! உண்மைதான், இந்த நாய் குழந்தைக்கு தவழக் கற்றுக்கொடுக்கின்றது.

சுசந்தா நந்தா என்ற இந்திய வன அதிகாரி இந்த சூப்பர் கியூட்டான வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

நந்தா அடிக்கடி அவரது ஃபாலோயர்களுக்காகவும் ட்விட்டர் குடும்பத்துக்காகவும் அழகான வீடியோக்களை பகிர்ந்துகொள்கிறார். எனினும், அவரது சமீபத்திய வீடியோவான இந்த நாய் வீடியோ மிகவும் கியூட்டாக உள்ளது.

அந்த வீடியோவில் “கற்பித்தல் என்பது இதயம் தொடர்பான வேலை. குழந்தைக்கு தவழும் கலையை கற்றுக்கொடுக்கும் நாய் மிகவும் அழகாக இருக்கிறது." என்று அவர் எழுதியிருக்கிறார்.

அந்த கியூட் வீடியோவை இங்கே காணலாம்:

இந்த வீடியோவில், ஒரு பொமரேனியன் நாய்  ஒரு குழந்தைக்கு தவழக் கற்றுக் கொடுப்பதைக் காண முடிகிறது. அந்த நாய் முதலில் எப்படி தவழ்வது என குழந்தைக்கு கற்றுக் கொடுக்கிறது. அனைவரும் ஆச்சரியப்படும் வகையில், குழந்தை அதை அழகாக பின்பற்றி தவழத் தொடங்குகிறது.

நாய் பின்னர் குழந்தையின் கன்னத்தில் ஒரு முத்தமிட்டு மேலும் தவழ அக்குழந்தைக்கு கற்றுக்கொடுத்து குழந்தையை ஊக்குவிக்கிறது.

18 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ கிளிப், ஒரு குழந்தை மற்றும் நாயின் பிணைப்பை அழகாகப் படம்பிடிப்பது மட்டுமல்லாமல், விலங்குகள் தங்கள் மனித நண்பர்களுக்கு உதவ எப்போதும் தயாராக உள்ளன என்ற முக்கிய செய்தியையும் தருகிறது.

இந்த வீடியோ இதுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும் 1700க்கும் மேற்பட்ட ரீட்வீட்களையும் பெற்றுள்ளது.


ALSO READ : பணமழை பொழிந்த டிரக்: அள்ளிச்சென்ற மக்கள்- டிரைவருக்கு வந்த சிக்கல்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்