நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உடல் எடையை குறைக்கணுமா; இந்த ‘Diet Plan’ உங்களை நிச்சயம் ஏமாற்றாது..!!

 உடல் எடையை குறைக்க விரும்புவர்கள், உணவில் சில மாற்றங்களைச் செய்து, ஒரு வாரத்திற்கான இந்த டயட் பிளானை பின்பற்றினால் கை மேல் பலன் நிச்சயம்.


எடை இழப்பு, நல்ல தூக்கம்  ஆகியவை கிடைக்க பலர் அடிக்கடி தங்கள் உணவை மாற்றுகிறார்கள். ஆனால் சரியான உணவைத் தேர்ந்தெடுப்பது பல உடல் நலப் பிரச்சினைகளிலிருந்து உங்களைக் காப்பாற்றும் என்பது உங்களுக்குத் தெரியுமா?  அதுவும் எடைய இழப்பிற்கான இந்த சிறந்த டயட் பிளான் மூலம், ஒரு வாரம் முழுவதும் 1000 கலோரிகள் மட்டுமே  எடுத்துக் கொள்வீர்கள். ஒரு வாரம் முழுவதும் உணவில் என்ன சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொண்டால், உடல் எடை குறையும் (Weight Loss) என்பது உறுதி.

காலையில்  சாப்பிட வேண்டியவை

1 வால்நட், 4 பாதாம், 1 அத்திப்பழத்தை இரவில் தண்ணீரில் ஊற வைக்கவும். இவை அனைத்தையும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். காலையில் வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை தண்ணீர், பெருஞ்சீரகம் தண்ணீர் அல்லது எலுமிச்சை தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். இது தவிர, எந்த இரண்டு பருவகால பழங்களையும் நாள் முழுவதும் சாப்பிடுங்கள். 

ஒரு வார காலத்திற்கான டயட் பிளான்

முதல் நாள்

காலை உணவில், காய்கறிகள் நிறைந்த அவல் உப்புமா ஒரு கப் சாப்பிடுங்கள். மதிய உணவில், ஒரு சப்பாத்தி, 1 கப் பருப்பு, 1 கப் காய்கறிகள் மற்றும் சாலட் சாப்பிடுங்கள்.
இரவு உணவில் வேக வைத்த உணவை அளவாக  சாப்பிடுங்கள்.

இரண்டாம் நாள்

காலை உணவில், 1 வெந்தய கீரை சேர்த்து செய்யப்பட்ட சப்பாத்தியை அரை கப் தயிருடன் சாப்பிடுங்கள். மதிய உணவில், ஒரு சப்பாத்தி, 1 கப் பனீர், அரை கப் பருப்பு மற்றும் சாலட் சாப்பிடுங்கள். இரவு உணவில், வெஜிடபிள் கட்லெட் சாப்பிடுங்கள். இது பொரித்ததாக இல்லாமல், தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி வேக வைத்ததாக இருந்தால் மிகவும் நல்லது.

மூன்றாவது நாள்

காலை உணவில் ஒரு கப் ஓட்ஸ் சாப்பிடுங்கள். மதிய உணவில், 2 ஊத்தாப்பம், 1 கப் சாம்பார், 2 டீஸ்பூன் தேங்காய் சட்னி சாப்பிடுங்கள். இரவு உணவில், புதினா சட்னியுடன் 1 பொங்கல் அல்லது கிச்சடியை சாப்பிடவும்.

நான்காவது நாள்

காலை உணவில், ரொட்டியுடன் 2 வேகவைத்த முட்டை (Egg) அல்லது 1 முட்டை ஆம்லெட் சாப்பிடுங்கள்.
மதிய உணவில், 1 கப் ராஜ்மா, 1 கப் சாதம் மற்றும் சாலட் சாப்பிடுங்கள். இரவு உணவில், 1 கப் காய்கறிகள் மற்றும் சாலட், முளை கட்டிய தானியங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்

ஐந்தாம் நாள்

காலை உணவில், காய்கறிகள் நிறைந்த 1 கப் உப்புமா சாப்பிடுங்கள். மதிய உணவில், 1 கப் தயிர், 1 கப்  காய்கறி, 1 ரொட்டி மற்றும் சாலட் சாப்பிடுங்கள். இரவு உணவில், கேப்பை தோசை சட்னியுடன் எடுத்துக் கொள்ளுங்கள்

ஆறாம் நாள்

காலை உணவில் புதினா சட்னியுடன் வெஜிடபிள் ஊத்தப்பம். மதிய உணவில், 3 இட்லிகள் மற்றும் 1 கப் சாம்பார் மற்றும் 2 டீஸ்பூன் தேங்காய் சட்னி சாப்பிடுங்கள். இரவு உணவில், 1 கப் காய்கறிகள் நிறைந்த உப்புமா
 
ஏழாவது நாள்

காலை உணவில், காய்கறிகளால் செய்யப்பட்ட சேமியா உப்புமா (Upma) ஒரு கப் சாப்பிடுங்கள். மதிய உணவில், 1 கப் பருப்பு, 1 கப் காய்கறிகள், 1 ரொட்டி மற்றும் சாலட் சாப்பிடுங்கள். இரவு உணவில், காய்கறிகளுடன் 200 கிராம் பன்னீர் 

இரவு உணவுக்குப் பிறகு க்ரீன் டீ அருந்தவும்

தினமும் இரவு உணவுக்கு 30 முதல் 40 நிமிடங்களுக்குப் பிறகு க்ரீன் டீ, லெமன்கிராஸ் டீ, சீரக டீ, அல்லது பெருஞ்சீரகம் டீ குடிக்கவும். இது உணவை ஜீரணிக்க உதவுவது மட்டுமல்லாமல், சிறந்த தூக்கத்திற்கும் நன்மை பயக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை கடைபிடிக்கும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்