நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஒரு மாம்பழ பெட்டியின் விலை எவ்வளவு தெரியுமா?

 தற்போது மாம்பழ சீசன் தொடங்கி உள்ளது.


இந்த நிலையில், ரத்னகிரியில் விளைந்த இந்த சீசனின் முதல் அல்போன்சா வகை மாம்பழ பெட்டி புனே சந்தைக்கு விற்பனைக்கு வந்தது.

இதனை வாங்க வியாபாரிகள் மத்தியில் கடும் போட்டி நிலவியது. 5000 ரூபாய்க்கு ஆரம்பித்த ஏலம் 10 ஆயிரம், 20 ஆயிரம் என்று ஏறிக்கொண்டே போனது.

ஏலத்தின் முடிவில் யுவராஜ் என்ற வியாபாரி 31 ஆயிரம் ரூபாய்க்கு மாம்பழ பெட்டியை ஏலம் எடுத்தி அசத்தினார்.

கடந்த அரை நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மாம்பழம் அதிக விலைக்கு ஏலம் போய்வுள்ளதாத வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

வடமாநிலங்களில் பிப்ரவரியில் தொடங்கும் மாம்பழ சீசன் தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் உச்சத்தை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.



ALSO READ : சிறுவனை நோக்கி படையெடுத்த ராட்சத பாம்புகள்! கடைசியில் நடந்த ட்விஸ்ட்

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!