நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சிறுவனை நோக்கி படையெடுத்த ராட்சத பாம்புகள்! கடைசியில் நடந்த ட்விஸ்ட்

 இரண்டு ராட்சத மலைப்பாம்புகள் சிறுவன் ஒருவனை படையெடுக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.


சில நொடிகள் கொண்ட இக்காட்சியினை பார்க்கும் போது, பார்வையாளர்களுக்கு பீதியே ஏற்படுகின்றது. குறித்த காட்சியி்ல் ஒரு சிறுவன் மரத்தடியில் வசதியாக அமர்ந்திருப்பதையும், அப்போது திடீரென இரு மலைப்பாம்புகள் அவன் முன் வருவதையும் காண முடிகின்றது.

மலைப்பாம்பின் நீளம் 15 அடிக்கும் அதிகமாகவும், எடை 100 கிலோவுக்கும் அதிகமாகவும் இருக்கும் என வீடியோவைப் பார்த்தால் தெரிகிறது. ஆரம்பத்தில் இரண்டு மலைப்பாம்புகளும் குழந்தைக்கு தீங்கு விளைவிக்குமோ என்ற சந்தேகத்துடன் பார்வையாளர்கள் கலங்கியும் உள்ளனர்.

ஆனால் ராட்சத மலைப்பாம்புகள் அந்த சிறுவனுக்கு எந்த தீங்கையும் விளைவிக்கவில்லை. மாறாக, சிறுவனின் மடியில் ஒரு பாம்பு தன் தலையை வைத்துக்கொள்கிறது. மற்றொரு பெரிய பாம்பும் சிறுவனுக்கு பின்னால் அமர்ந்திருப்பதையும் காண முடிகிறது.

சிறுவன் சிறு குழந்தையை சீராட்டுவது போல, தன் மடியில் தலை வைத்திருக்கும் பாம்பை பாசத்தோடு தடவிக்கொடுப்பதையும் காணொளியில் காண முடிகின்றது.





Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!