நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நிம்மதியான தூக்கம் உங்கள் கண்களை தழுவ சில எளிய டிபஸ்!

 தூக்கமின்மை பிரச்சனையைத் தவிர்க்க, உங்கள் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களில் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.


ல்ல தூக்கம் வேண்டும் என்பது தான் ஒவ்வொரு மனிதனின் ஆசை. சிறந்த உடல் ஆரோக்கியத்திற்கு, குறைந்தது 7 முதல் 8 மணிநேரம் தூங்க வேஎண்டும் என பரிந்துரைக்கிறது. தூக்கமின்மை அல்லது குறைவான தூக்கத்தினால் உங்கள் உடல்நலம் பாதிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். பலருக்கு சரியான நேரத்தில் தூக்கம் வராமல், காலையில் எழுந்திருக்கும் போது சோர்வாக உணர்கிறார்கள். சில எளிய வழிமுறைகள் மூலம் இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

தாமதமான தூக்கத்திற்கான காரணம்

சிலருக்கு பகலில் உறங்கும் பழக்கம் இருக்கும்,இதன் காரணமாக இரவில் வெகுநேரம் தூக்கம் வராமல் இருக்கலாம். சிலர் இரவில் இருட்டில் கம்ப்யூட்டர் அல்லது மொபைலை பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. அதன் வெளிச்சம் கண்களுக்கு தீங்கு விளைவித்து தூக்கத்தை பாதிக்கிறது.

தூக்கமின்மையை விரட்ட உதவும் 5 உணவுகள்

ஒரு நபர் தூக்கமின்மையால் தொந்தரவு செய்தால், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவை எடுத்துக் கொள்வது அவசியம். படுக்கைக்கு செல்வதற்கு 4 மணி நேரத்திற்கு முன், சாப்பிட்டு விட வேண்டும் என்பது மிகவும் முக்கியம். இது தவிர, மாவுச்சத்துள்ள கார்போஹைட்ரேட்டுகளும் தூக்கமின்மையை போக்கும்.

1. வெள்ளை அரிசி உணவு
2. வெள்ளை பிரெட்
3. அன்னாசி மற்றும் தர்பூசணி
4. குக்கீஸ் மற்றும் கேக்குகள்
5. உருளைக்கிழங்கு சேர்த்த உணவு

சீக்கிரம் தூக்கம் வர 3 வழிகள்

1. பகலில் தூங்கும் பழக்கத்தை கைவிடுங்கள்

தூக்கமின்மையை போக்க, உங்கள் வாழ்க்கைமுறையில் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும். பகலில் அதிக நேரம் தூங்காதீர்கள். இது இரவு தூக்கத்தை கெடுக்கும். உங்களுக்கு நிச்சயம் தூங்க வேண்டும் என நினைத்தால், பகலில் அரை மணி நேரம் மட்டுமே தூங்குங்கள்.

2. அறை வெப்பநிலையை சீராக பராமரிக்கவும்

உங்களுக்கு நல்ல தூக்கம் வேண்டுமென்றால், அரையின் வெப்பம் சீராக இருக்க வேண்டும். அதிக வெப்பநிலை அதாவது, சூடாக இருந்தால், தூங்குவதில் சிக்கல்கள் இருக்கும். 

3. நேரத்தை அடிக்கடி பார்க்க வேண்டாம்

சிலருக்குத் தூங்கும் போது கடிகாரத்தை திரும்பத் திரும்பப் பார்ப்பதால், தூங்குவதற்கு இவ்வளவு நேரம் ஆகிறதே என மனதில் டென்ஷன் அதிகரிக்கும். இதனால், தூக்கம் வருவது இன்னும் தாமதமாகும்.


ALSO READ : வீட்டிலிருந்தபடியே அட்டகாசமாய் பணம் ஈட்டலாம்: Instagram அளிக்கும் சூப்பர் வாய்ப்பு....

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!