நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உடல் எடை மற்றும் பெரு வயிற்றைக் குறைக்க உதவும் அருமருந்து




தேவையான பொருட்கள்


மணத்தக்காளிக் கீரை ஆய்ந்தது - 100 கிராம்

எலுமிச்சம் பழம் - அரை எலுமிச்சம் பழம்

சின்ன வெங்காயம். - 5



செய்முறை

முதலில் தேவையான அளவு மணத்தக்காளிக் கீரையை எடுத்து ஆய்ந்து பழுப்பு இலைகளை நீக்கி சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.

முதலில் ஆய்ந்த மணத்தக்காளிக் கீரையை நன்கு கொதிக்க வைத்த நீரில் ஐந்து நிமிடம் போட்டு எடுத்துக் கொள்ளவும். அந்த மணத்தக்காளி கீரையை மிக்ஸியில் போட்டு அதனுடன் அரை எலுமிச்சம் பழத்தை தோலோடு நறுக்கிப் போட்டு வெங்காயத்தையும் சேர்த்து அரைத்துச் சாறாக வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

தீரும் குறைபாடுகள்

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் பெரு வயிற்றைக் கரைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் உதவும் அற்புதமான கீரை. 

சாப்பிடும் முறை

இவ்வாறு தயாரித்து வைத்து எடுத்துள்ள மணத்தக்காளிக் கீரைச் சாற்றைத் தினமும் காலை வேளை உணவிற்குப் பிறகு சாப்பிட்டு வரவும். முதல் 48 நாட்கள் சாப்பிடவும். பின்பு தேவைக்கேற்ப தொடரவும்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாகச் சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.



Comments

Popular posts from this blog