நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சருமத்தின் அழகை மேலும் மெருகேற்ற வேண்டுமா? அப்போ இந்த பழம் ஒன்றே போதுமே!

 திராட்சையில் வைட்டமின் சி நிறைந்த ஒரு பழம். வைட்டமின் சி மட்டுமல்ல, இதில் மற்ற பிற வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆஸிடண்ட் மற்றும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

து ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சரும அழகிலும் பெரும் உதவியாக இருக்கின்றது.

சருமத்தில் உள்ள பழ பிரச்சினைகளை தீரக்க கூடியதாக இது இருக்கின்றது. தற்போது திராட்சையை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம். 


  • திராட்சை பழச்சாற்றை பிழிந்து அதன் சக்கையை முகம் முழுவதும் பூசி, சிறிது நேரத்திற்கு பின்னர் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவினால், கருமை நீங்கி பொலிவு பெறும். 

  •  திராட்சை சாறில் அதிக அளவு ஆண்ட்டிஆக்சிஜன் உள்ளது. அது சருமத்தை சுத்திகரித்துவிடும். இரத்தத்தில் உள்ள செல்களை அதிகப்படுத்தி சருமத்தை சுத்தம் செய்து பொலிவடையச் செய்துவிடும்.

  • திராட்சை பழச்சாற்றில் சூரிய வெப்பத்தால் தாக்கக்கூடிய சரும பாதிப்புக்கள் மற்றும் வெப்பக் கட்டிகளிலிருந்து பாதுகாக்கும் தன்மை உள்ளது. திராட்சை சாறு சருமப் பிரச்சனைகளைத் தடுக்கும் சக்தி கொண்டது. வெயில் காலத்தில் தினமும் ஒரு கப் திராட்சை சாறு அருந்தினால் சருமச் சிக்கலை தவிர்க்கலாம்.

  •  திராட்சை பழச்சாறு இறந்த செல்களை நீக்கும் திறன் கொண்டது. இரத்த ஓட்டத்தை சீராக்கும் திறன் கொண்டதால், சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து வரட்சியிலிருந்து காக்கிறது. 

  •    திராட்சை சாற்றை முகத்திலும் கழுத்திலும் தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவினால் சருமம் ஈரப் பதத்துடன் காணப்படும். இதனை தினமும் செய்து வந்தால் சரும வரட்சியை தடுக்கலாம்.

  •  கண்களுக்கு கீழே கருவளையம் இருந்தால், ஒரு திராட்சை பழத்தை இரண்டாக வெட்டி கண்களின் கீழே தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் கருவளையம் நீங்கிவிடும். 

  •    சிறிதளவு திராட்சை சாருடன், சிறிதளவு பாசிப்பயிறு மாவை சேர்த்து நன்றாக கலந்து, அதை முகத்தில் பூசி 15 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவேண்டும். இவ்வாறு தொடர்ந்து வாரம் இரு முறை வீதம் 1 மாதகாலம் செய்துவந்தால் சருமத்தில் உள்ள கரும் புள்ளிகள் படிப்படியாக மறைந்துவிடும். 



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்