நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இவற்றில் ஒன்றை தினமும் செய்து வந்தாலே போதும்

 கோடை வெயில் நம்மை சுட்டெரிக்க, சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே போகிறது. இப்படி சருமத்தின் நிறம் கருமையாவதால் பெண்களை அதிக அளவில் வருந்துகிறார்கள்.

தற்கான பலர் கண்ட கண்ட இரசாயம் கலந்த கலவைகளை பூசி வருகிறார். ஆனால் இது அந்த அளவிற்கு நிரந்த தீர்வினை தராது.

அந்தவகையில் சரும நிறத்தை எளியமுறையில் அதிகரிக்க கூடிய ஒரு சில இயற்கை வழிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.    


  • உங்கள் முகத்தில் உள்ள கருமையைப் போக்க 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை போட்டு வந்தால், சருமத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

  • உங்களுக்கு பருக்கள் அதிகம் வருமாயின், இந்த ஃபேஸ் பேக் சரியாக இருக்கும். இதற்க 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 2 டீஸ்பூன் கடலை மாவு மற்றும் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து, பேஸ்ட் செய்ய சிறிது நீர் அல்லது பாலை ஊற்றி கிளற வேண்டும். பின் அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

  • ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் பால், 2 டீஸ்பூன் கடலை மாவு சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி நன்கு காய்ந்த பின், நீரால் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2-3 முறை போட்டாலே நல்ல மாற்றம் தெரியும்.

  • 2 டீஸ்பூன் தேனில், 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அதோடு 3-5 துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இந்த மாஸ்க் சருமத்தை வெள்ளையாக்குவதோடு, பிம்பிள் பிரச்சனையையும் போக்க வல்லது.

  • ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் பால் சேர்த்து கலந்து, அதை முகத்தில் தடவி முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்து கழுவ வேண்டும். இப்படி இரவு முழுவதும் ஊற வைத்தால் தான் முகம் நன்கு பொலிலோடு ஜொலிக்கும். முகத்தில் உள்ள மஞ்சள் கறை நீங்க, கடலை மாவை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, அதைக் கொண்டு முகத்தைத் தேய்த்து கழுவுங்கள். இதனால் சரும நிறம் மேம்படும். இந்த மாஸ்க் வறட்சியான சருமம், எண்ணெய் பசை சருமம் மற்றும் முகப்பரு அதிகம் வரும் சருமத்திற்கு மிகவும் நல்லது.

  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், 2 டீஸ்பூன் வெள்ளரிக்காய் சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, 1 மணிநேரம் கழித்து நீரால் கழுவ வேண்டும். இப்படி மாலை வேளையில் தினமும் செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கிவிடும். விருப்பமுள்ளவர்கள், இந்த மாஸ்க்கை இரவு முழுவதும் ஊற வைத்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்