நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சிறுநீர் துர்நாற்றத்தோடு வெளியேறுகிறதா? இதனை எப்படி போக்கலாம்?

 பொதுவாக சிறுநீரக கோளாறுகளை உணர்த்தும் அறிகுறிகளில் ஒன்று சிறுநீர் துர்நாற்றம்


இது சங்கடத்தை குறிப்பாக பெண்களிடம் அதிக சங்கடத்தை உண்டாக்க செய்யும். இதை எளியமுறையில் கூட போக்க முடியும். 

தற்போது துர்நாற்றத்தோடு வெளியேறும் சிறுநீரை எப்படி எளிய முறையில் போக்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.


  • ஒரு நபர் நாள் ஓன்றுக்கு 7-8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் உட்கொள்ளலை அதிகரிப்பது தொற்றுகள் இருந்தால் அதை அழிக்க உதவும். இது நீரிழப்பு பிரச்சனையை தீர்த்து, சிறுநீர் துர்நாற்றத்தை குறைக்கிறது. ஏனெனில் நீரிழப்பும் சிறுநீர் துர்நாற்றத்தை உண்டு செய்யும்.

  • சிறுநீர் துர்நாற்றத்தை போக்க புரோபயாட்டிக் உதவும் அதற்கு தினசரி உணவில் சேர்த்துகொள்வது நன்மை பயக்கும். 

  • க்ரான்பெர்ரி சிறுநீர்கோளாறு குறிப்பாக சிறுநீர் பாதை நோய்த்தொற்று என்றால் அதற்கு தீர்வு இதுதான். இது சிறுநீரில் உள்ள துர்நாற்றத்தை நீக்கி, உங்கள் சிறுநீர் பாதையை சுத்தம் செய்யும். 

  • சிறுநீரில் துர்நாற்றம் வீசுவதற்கு முக்கிய காரணம் உடலில் உள்ள நச்சுப்பொருள்கள் அதிகரிப்பது தான். உணவில் வைட்டமின் சி அதிகம் சேர்ப்பதன் மூலம் நச்சுவை வெளியேற்றலாம். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. 

  •   கரீன் டீயில் ஆன் டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். இதில் நல்ல அளவு காஃபின் உள்ளது. இது நெஃப்ரான்களை கட்டுப்படுத்துகிறது. இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க உதவுகிறது. 

  •   பூண்டு போன்ற மசாலா மற்றும் வாசனை பொருள்களை சேர்க்கலாம். எனினும் தினசரி இதன் அளவு அதிகரிக்காமல் பார்த்துகொள்ளுங்கள். 




Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!