உலகிலேயே இதுதான் பெரிய பேனா - கின்னஸ் சாதனை....
- Get link
- X
- Other Apps
15 அடி நீளமும், 37 கிலோ எடையும் கொண்ட இந்த பேனாவை சாதாரணமாக பயன்படுத்த முடியாது என்றாலும், பேனா காண்பவர்களை ஆச்சரியப்படுத்துகிறது. இந்தப் பேனாவை பயன்படுத்த குறைந்தது ஐந்து பேர் தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே மிகப்பெரிய பால்பாய்ன்ட் பேனா ஒன்றை உருவாக்கி கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத்தை சேர்ந்த ஆச்சாரியா மகுருனி ஸ்ரீநிவாஸா என்பவர் கடந்த 2011ஆம் ஆண்டில் மிகப் பெரிய அளவிலான பால் பாயிண்ட் பேனா ஒன்றை உருவாக்கினர். தற்போது அந்தப் பேனா கின்னஸ் ரெக்கார்டில் இடம் பிடித்துள்ளது.
இதுதொடர்பான வீடியோவை கின்னஸ் அமைப்பு இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளது. அதில் ஸ்ரீநிவாஸா மற்றும் அவரது குழுவினர் பேனாவை சுமந்து செல்கின்றனர்.
பிரம்மாண்ட அளவில் உருவாக்கப்பட்ட இந்த பேனா, 5 ரூபாய்க்கு வாங்கும் பால் பாயிண்ட் பேனாவை போலவே எழுத முடிகிறது.
15 அடி நீளமும், 37 கிலோ எடையும் கொண்ட இந்த பேனாவை சாதாரணமாக பயன்படுத்த முடியாது என்றாலும், பேனா காண்பவர்களை ஆச்சரியப்படுத்துகிறது. இந்தப் பேனாவை பயன்படுத்த குறைந்தது ஐந்து பேர் தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.
ALSO READ : காணாமல் போன விமானம் 37 ஆண்டுகளுக்கு பின் தரையிறங்கியதா? - டைம் ட்ராவல்
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment