நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைப்பது எப்படி?

 உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைப்பதற்கான வழிமுறைகள் இருக்கின்றன.


மனிதர்களுக்கு உடல் எடையை குறைப்பது என்பது எப்போதும் சிம்ம சொப்பனமாகவே இருக்கும். உடற்பயிற்சி செய்தால் உடல் எடை குறையும் என்றாலும் உடற்பயிற்சி செய்வதற்கான ஆர்வமோ, நேரமோ இங்கு பலரிடம் இருப்பதில்லை.

உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைப்பது எப்படி என்ற வழிமுறையை காணலாம்.

உணவில் கட்டுப்பாடு:

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம். உணவு உட்கொள்வதற்கு முன்பாகவே பசியை தீர்க்கும் வழிமுறைகளை யோசிக்க வேண்டும்

அந்தவகையில், குறிப்பிட்ட இடைவெளியில் சீராக தண்ணீர் பருகுதல், உலர் பழங்களை சாப்பிடுதல் பசியை அதிகம் கட்டுப்படுத்திவிடும்.

நார்ச்சத்து உணவுகள்:

நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது  நல்லது. அந்தவகை உணவுகள் செரிமானத்தை அதிகப்படுத்துவதோடு நீண்ட நேரம் உற்சாகமாக செயல்படவும் வழிவகுத்து உடல் எடையை கட்டுப்படுத்தும்.

தண்ணீர்:

நமது உடலில் நீர்ச்சத்தை தக்க வைப்பதும் உடல் எடையை குறைக்க உறுதுணையாக இருக்கும். எனவே தண்ணீரை பருகுதல், நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுதல் போன்ற செயல்முறைகள் உடல் எடையை கட்டுப்படுத்த சிறந்த வழியாகும்.


தூக்கம்:

தேவையான நேரம் தூங்குவது மன அழுத்தத்தை தூண்டும் ஹார்மோனை கட்டுப்படுத்தி பசியையும்  குறைக்கும். அதேபோல் தூக்கமின்மையால் அவதிப்பட்டால் உடல் பருமன் அதிகரித்துவிடும். 

குறிப்பாக, தூக்கத்தை இழக்கும்போது மன அழுத்தத்துடன் தொடர்புடைய கார்டிசால் ஹார்மோனின் உற்பத்தி அதிகமாகும். அதனால் கொழுப்பு அதிகமாகி, உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.


ALSO READ : இனி மேக்கப் தேவையில்லை! இந்த பொருட்களை கொண்டே சருமத்தை ஜொலிக்க செய்யலாம்......

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!