whatsapp update: புதிய ரியாக்ஷன்ஸ் அறிமுகம்...!
- Get link
- X
- Other Apps
வாட்ஸ்அப் செயலியில் மெசேஜ் ரியாக்ஷன்ஸ் மற்றும் ஃபைல் ஷேரிங் போன்ற அம்சங்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் பயனர்கள் எமோஜிக்கள் மூலம் பதில் அனுப்பும் வகையில், புதிய ரியாக்ஷன் கொண்ட எமோஜிகள் அப்டேட் வாட்ஸ் அப்பில் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸ்அப் செயலியில் பகிரப்படும் ஃபைல் சைஸ் எண்ணிக்கையும் 100 MB-ல் இருந்து, 2 GB வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த அப்டேட் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என கடந்த வாரம் அந்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், தற்போது புது அம்சங்கள் பற்றிய தகவலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ரியாக்ஷன்ஸ் அம்சத்தில் முதற்கட்டமாக சில எமோஜிக்கள் மட்டும் வழங்கப்பட்டுள்ளன. தற்போது வாட்ஸ்அப் மெசேஜ் ரியாக்ஷன்ஸ் அம்சத்தில் அதிகபட்சம் ஃபேஸ்புக் போல் ஆறு எமோஜிக்களை பயன்படுத்தி பதில் அனுப்ப முடியும். இதன் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும் என வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.
ALSO READ : அடேங்கப்பா; நெருப்பில் ஸ்டண்ட் செய்த மணமக்கள்; வாயைப் பிளத்த நெட்டிசன்கள்......
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment