நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஒரு மணி நேரத்தில் 172 உணவுகள் ஆசிய சாதனை படைத்த 9 வயது சிறுவன்.

ஒரு மணி நேரத்தில் 172 உணவு வகைகளை சமைத்து 9 வயது சிறுவன் ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
திருவனந்தபுரம்,கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த ஹஷ்னாஸ் அப்துல்லா- ரஷா அப்துல்லா தம்பதியரின் மகன் ஹயன் அப்துல்லா (வயது 9). நான்கு வயதில் இருந்தே சமையல் மீது அதீத ஆர்வம் இருந்துள்ளது. சமீபத்தில் ஹயன் அப்துல்லா வேகமாக சமையல் செய்வதை பார்த்து அவரது பெற்றோர் அவனுக்கு ஊக்கம் கொடுத்துள்ளனர். அத்துடன் வித்தியாசமாக எதாவது செய்ய வேண்டும் என்று ஹயனும் நினைத்துள்ளார்.அதன்படி, சமீபத்தில் நடந்த போட்டியில், ஒரு மணி நேரத்தில் 172 உணவு வகைகளை சமைத்து ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார் ஹயன் அப்துல்லா. தனக்கு கொடுக்கப்பட்ட 60 நிமிடத்தில் பிரியாணி, ஜூஸ் வகைகள், கேக்குகள், தோசை, சாலட், சாக்லெட்ஸ் உள்ளிட்ட உணவு வகைகளை சமைத்து சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.ஹயன் அப்துல்லாவின் பெற்றோர் சென்னையில் உணவகங்கள் நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் ஹயன், சமைப்பதில் ஆர்வமாக இருந்தாலும், எதிர்காலத்தில் ஒரு பைலட் ஆக விருப்பம் தெரிவித்து உள்ளார்.

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!