கலிபோர்னியா சாலையில் திடீரென பெய்த ‘டாலர்’ மழை!
- Get link
- X
- Other Apps
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு பரபரப்பான நெடுஞ்சாலை சாலையில் திடீரென டாலர் நோட்டுகள் மழையாக பெய்யத் தொடங்கியது. ஒரு வைரலான வீடியோவில், மக்கள் எப்படி காரை நிறுத்தி நோட்டுகளை சேகரிக்கிறார்கள் என்பதை தெளிவாகக் காணலாம்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு பரபரப்பான நெடுஞ்சாலை சாலையில் திடீரென டாலர் நோட்டுகள் மழையாக பெய்யத் தொடங்கியது. ஒரு வைரலான வீடியோவில், மக்கள் எப்படி காரை நிறுத்தி நோட்டுகளை எடுக்கிறார்கள் என்பதை தெளிவாகக் காணலாம்.
டாலர் நோட்டு மழையால் நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டது
அமெரிக்காவில் கலிபோர்னியா நெடுஞ்சாலையில் பெய்த டாலர் மழை குறித்து செய்தியாளர்கலிடம் கூறிய அங்கிருந்த மக்களில் ஒருவர், "நெடுஞ்சாலையில் ஏராளமான பணத் தாள்கள் கிடந்தன, மக்கள் வாகனங்களை நிறுத்தி, நெடுஞ்சாலையை முற்றிலுமாகத் தடுத்து, பைகளில் பணத்தை நிரப்பத் தொடங்கினர்." என்றார். இது தொடர்பாக சாலையில் வாகனத்தை நிறுத்தி, போக்குவரத்தை தடுத்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டதாகவும் செய்தியாளர் தெரிவித்தார்.
பணத்தை திருப்பித் தர வேண்டும்
CHP செய்தித் தொடர்பாளர் இது குறித்து கூறுகையில், "நாங்கள் இப்போது FBI உடன் இணைந்து கூட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறோம். மேலும் நீங்கள் ஏதேனும் பணத்தை எடுத்திருந்தால், உடனடியாக CHP அலுவலகத்திற்கு திருப்பி அனுப்புமாறு பரிந்துரைக்கிறேன். எங்களிடம் ஏராளமாக வீடோ கிளிப்பிங் உள்ளது. உங்களை எளிதாக அடையாளம் காணலாம். அப்போது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்த்துள்ளார்.
பணட்த்ஹை யாரெல்லாம் எடுத்துக் கொண்டார்கள் என்பதை, வீடியோவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோக்களில் சிலவற்றின் பல ஸ்கிரீன் ஷாட்கள் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் CHP ஆல் வெளியிடப்பட்டது, இது FBI உடன் சேர்ந்து இந்த சம்பவத்தை விசாரித்தது. புகைப்படங்களில் உள்ள வாகன ஓட்டிகளின் அடையாளங்களை கண்டறிய முயற்சிப்பதாக ஏஜென்சி கூறியதுடன், "சாத்தியமான கிரிமினல் குற்றச்சாட்டுகளைத் தவிர்க்க 48 மணி நேரத்திற்குள்" பணத்தைத் திருப்பித் தருமாறு வலியுறுத்தியது.
எனினும், இந்த வினோத சமபத்திற்கான காரணம் தெரியவில்லை. அந்த வழியாக சென்ற வாகனத்தில் ஏற்றிச் சென்ற பணம் பறந்ததனால் ஏற்பட்டதா; எதனால் பறந்தது என்பது குறித்த தகவல் ஏதும் இல்லை.
ALSO READ : 4 கிலோ வரை உணவு உண்ணும் சாப்பாட்டு ராமனுக்கு ஓட்டல் செல்ல தடை
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment