நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உங்க வாயை சுத்தி அசிங்கமா கருப்பா இருக்கா? நொடியில் விரட்டியடிக்க இந்த ஒரே ஒரு சக்திவாய்ந்த பொருள் போதும்!

 முகம் அழகாக பளிச்சென்று இருப்பதற்கு ஃபேஸ் மாஸ்க் போடுவோம்.ஆனால் வாயை சுத்தி இருக்கும் கருமையை போக்க யாரும் முக்கியத்துவம் கொடுப்பது இல்லை.

வாயைச் சுற்றி இருக்கும் கருமையைப் போக்க உதவும் சில பொருட்கள் குறித்து பார்க்கலாம்.


கடலை மாவு

கடலை மாவுடன், மஞ்சளை சேர்த்து வாயைச் சுற்றி இருக்கும் கருப்பான இடத்தில் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

அதற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்து, அதில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது பால் அல்லது நீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ளவும்.


பின் அந்த கலவையை வாயைச் சுற்றி தடவி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் நல்ல ஒரு மாற்றம் கிடைக்கும்.

வாரம் ஒரு முறை முகத்திற்கு பயன்படுத்தினாலும் நல்ல மாற்றம் கிடைக்கும்.



ALSO READ : சருமத்தின் அழகை மேலும் மெருகேற்ற வேண்டுமா? அப்போ இந்த பழம் ஒன்றே போதுமே!


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்