நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

முழு முட்டை அல்லது முட்டையின் வெள்ளைக்கரு! எது ஆரோக்கியமானது?

 பொதுவாக முட்டை ஊட்டச்சத்து நிறைந்த உணவாக கருதப்படுகின்றன. அதனால் தான் நாம் இதனை உணவில் சேர்த்து கொள்கிறோம்.

ஒரு முட்டையில் ஏழு கிராம் உயர் தர புரதம், இரும்பு, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கரோட்டினாய்டுகள் உள்ளன. லுடீன் மற்றும் கோலின் போன்ற நோய்களை எதிர்க்கும் ஊட்டச்சத்துக்களும் முட்டையில் நிறைந்திருக்கிறது.

அதிலும் முட்டையின் வெள்ளைக்கரு மிகவும் ஆரோக்கியமானது என்று சிலர் கூறினாலும், பலர் அதை கேள்விக்குள்ளாக்குகின்றனர். உண்மையில் முழு முட்டை சிறந்ததா? இல்லை முட்டை வெள்ளைக்கரு சிறந்ததா என்று பார்ப்போம். 

முழு முட்டை

 முழு முட்டைகள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் வளமான ஆதாரம் மட்டுமல்ல, இதில் புரதம் மற்றும் கலோரிகள் அதிகளவில் உள்ளன. 

 முழு முட்டை உடலுக்கு அதிக புரதத்தை அளிக்கும் அதே வேளையில், அவை அதிக கலோரிகளையும் கொண்டு வருகின்றன. 

முட்டை வெள்ளைக்கரு

 முட்டையின் வெள்ளைக்கருவில் வைட்டமின்கள் குறைவாகவும், புரதச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் இருக்கும்.

முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ள புரதம் உயர்தர முழுமையான புரதம் என்றும் கருதப்படுகிறது, அதாவது உடலுக்குத் தேவையான அளவு ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களும் இதில் உள்ளன.


எதனை தேர்வு செய்வது? 

முழு முட்டைகளை உண்பது, உங்களை முழுதாக உணர வைப்பதோடு குறைவான கலோரிகளை உட்கொள்ள உதவுகிறது. முட்டையின் வெள்ளைக்கருவுடன் ஒப்பிடும்போது இது ஊட்டச்சத்துக்களில் அதிக நன்மை பயக்கும்.

ஏனெனில் ஒருவர் எடையைக் குறைக்க முயற்சிக்கும்போது. இதைக் கருத்தில் கொண்டு, எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கு முட்டையின் வெள்ளைக்கரு சிறந்த வழி. 

முட்டையின் வெள்ளைக்கருவில் கொழுப்பு அல்லது கொலஸ்ட்ரால் இல்லை. மேலும் அவற்றில் கார்போஹைட்ரேட் அல்லது சர்க்கரையும் இல்லை. 

ஒருநாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்?

எளிதில் செரிமானம் ஆகக்கூடிய புரதச்சத்து அதிகம் நிறைந்த முட்டையில், அத்தியாவசியமான 9 அமினோ அமிலங்கள் நிறைந்திருக்கின்றன.

எனவே தினமும் நன்கு சமைக்கப்பட்ட முட்டையை சாப்பிடுவது நல்ல பலனை கொடுக்கும், குழந்தைகளுக்கு ஒரு வயதான பின்னர் தாராளமாக முட்டையை கொடுக்கலாம்.

பெரியவர்களுக்கு, கொலஸ்ட்ரால் இருக்கும் பட்சத்தில் வாரத்தில் 3 நாள்களுக்கு மஞ்சள் கருவோடு ஒரு முட்டை சாப்பிடலாம்.

கொலஸ்ட்ரால் இல்லாதவர்கள் தினமும் ஒன்று எடுத்துக்கொள்ளலாம், புரதத் தேவைக்கேற்ப இரண்டு, மூன்று வெள்ளைக் கரு கூட எடுத்துக்கொள்ளலாம்.

இதயம் தொடர்பான பாதிப்பு உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், வேறு ஏதும் உடல் பிரச்னைகள் உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின்படி முட்டையைச் சாப்பிடுவது நல்லது.


முட்டையை எப்படியெல்லாம் சாப்பிடலாம்?

முட்டையை உட்கொள்ளும் போது அதன் முழு பலன்களை பெற அவித்து சாப்பிடலாம், வெறும் 7 நிமிடங்கள் வேகவைத்தாலே போதுமானது.

சப்பாத்தியுடன், பொரியலாக, காய்கறிகளுடன் கலந்தும் முட்டையை சாப்பிடலாம்.


சமைத்த உடனேயே முட்டையை சாப்பிடுவதே சிறந்தது, கடைகளில் பிரியாணி, முட்டை பப்ஸ் வாங்கும் போது எப்போது தயார் செய்யப்பட்டது என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.

மிக முக்கியமாக முட்டையைப் பச்சையாகவோ, அரை வேக்காடாகவோ, வேகாத மஞ்சள் கருவாகவோ உட்கொள்ளக் கூடாது, பலருக்கும் இது ஒவ்வாமையை ஏற்படுத்தும்.


குறிப்பு

முட்டையின் வெள்ளைக்கரு அதிக புரதம் தேவைப்படுபவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும், ஆனால் விளையாட்டு வீரர்கள் அல்லது பாடி பில்டர்கள் போன்றவர்கள் அவர்களின் கலோரி உட்கொள்ளலைக் கவனிக்க வேண்டும்.  



ALSO READ : உணவை சமைத்து முடித்து, ருசியாக உள்ளதா என்றும் சாப்பிட்டு பார்க்கும் ரோபோட்..!


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்