நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

42 அடியில் நகம்... கின்னஸ் சாதனை படைத்த பெண்ணின் உருக்கமான சபதம்!

 இந்த உலகை சுற்றி ஏராளமான சாதனைகள் நடந்துகொண்டே தான் இருக்கிறது. பலரும் கின்னஸ் சாதனைக்காக பல் விஷயங்களை செய்து வருகின்றனர்.

அதன்படி, அமெரிக்காவின் Minnesota என்னும் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், இரண்டு கைகளில் மிக நீளமான விரல் நகங்களை வளர்த்து சாதனை ஒன்றை முறியடித்து, புதிய சாதனையை படைத்துள்ளார்.

கின்னஸ் சாதனை

இந்த டயானா ஆம்ஸ்ட்ராங் என்ற பெண்ணின் கைகளில் உள்ள பத்து விரல் நகங்களின் நீளம் 42 அடியும், 10.4 இன்ச்கள் கொண்டுள்ளது.

இதில் டயானாவின் நீளமான நகம் என்பது அவரது வலது கட்டைவிரல் (4 அடி 6.7 இன்ச்) ஆகும். மேலும், டயானாவின் விரல் நகங்களின் ஒட்டுமொத்த நீளம் என்பது, ஒரு நிலையான மஞ்சள் நிறத்தில் உள்ள பள்ளி பேருந்தை விட நீளமானதாகும்.

கடந்த 25 ஆண்டுகளாக டயானா தன்னுடைய நகத்தினை வளர்த்து வருகிறார். பலரும் உலக சாதனையை படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், இப்படி ஏதாவது செய்வார்கள்.

சாதனைக்கு பின்னால் சபதம்

ஆனால், டயானாவின் சாதனைக்கு பின்னால், உருக்கமான சபதம் தான் உள்ளது. அதன்படி, ஒரு நாள் இரவு தூக்கத்திலேயே ஆஸ்த்மா நோயால் அவர் உயிரிழந்து போனார்.

அதற்கு முந்தைய தினம் இரவு கூட எனது நகத்தை சுத்தம் செய்து அவர் பாலிஷ் செய்து கொடுத்தார். இதனால் மகளின் இறப்புக்கு பின் என் நகத்தை வெட்டவே கூடாது என்று நான் சபதம் எடுத்தேன்.

இது என் வாழ்க்கையின் கொடுமையான நாள். தொடர்ந்து என் நகம் வளர்ந்துகொண்டே போகும் போது எனது குழந்தைகள் நகம் வெட்ட வேண்டும் என கூறினார்கள்.

ஆனால், முதலில் ஏன் நான் நகங்களை வளர்க்கிறேன் என்ற காரணத்தை அவர்களிடம் சொல்லவே இல்லை.

அதன்பின், ஒரு நாள், நான் எனது குழந்தைகளிடம் ஏன் நகம் வளர்க்கிறேன் என்பதை விளக்கினேன்என டயானா உருக்கத்துடன் பேசி இருக்கிறார். சாதனைக்காக இல்லாமல், மகள் இறந்ததன் சபதத்தால் நகம் வளர்த்தி சாதனை தொடர்பான செய்தி, பலரையும் உருக வைத்துள்ளது.  



ALSO READ : பறக்கும் ஹெலிகாப்டரில் புல் அப்ஸ்! கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்.....

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!