Instagram New Update | விரைவில் தங்கள் புகைப்படங்களை அல்ட்ரா-டால் எனப்படும் மிக நீளமான வடிவத்தில் பதிவேற்ற முடியும்.
இன்று பலருக்கும் மிகவும் பிடித்தமான செயலிகளில் ஒன்றாக இருப்பது இன்ஸ்டாகிராம் என்றே சொல்லலாம். இதில் பல மணி நேரம் செலவழிக்கும் நபர்களை எல்லாம் நம்மால் பார்க்க கூடும். பெரும்பாலும் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அதிக அளவில் பதிவிட்டு வருவார்கள். ஆனால், பெரும்பாலும் மிக உயரமான புகைப்படங்களை போட்டோக்களை பதிவிட முடியவில்லை என்றே இதன் பயனர்கள் கூறி வருகின்றனர். இதற்கு விரைவில் ஒரு தீர்வை தரவுள்ளதாக இன்ஸ்டாகிராம் தரப்பில் கூறியுள்ளனர்.
அதன்படி, விரைவில் தங்கள் புகைப்படங்களை அல்ட்ரா-டால் எனப்படும் மிக நீளமான வடிவத்தில் பதிவேற்ற முடியும். இது அடிப்படையில் 9:16 விகிதத்தைக் கொண்டதாக இருக்கும். போட்டோ ஷேரிங் பிளாட்ஃபார்ம் என்று அழைக்கப்படும் இன்ஸ்டாகிராம் விரைவில் இதற்கான சோதனையை தொடங்க உள்ளதாக கூறியுள்ளது. வாராந்திர கேள்வி பதில் அமர்விற்குப் பதிலளித்த ஆடம் மொஸ்ஸெரி இந்தப் புது அப்டேட் குறித்து பகிர்ந்துள்ளார். அதன்படி, "நீங்கள் உயரமான வீடியோக்களை பதிவிட விருப்பவராக இருக்கலாம். ஆனால் நீங்கள் இன்ஸ்டாகிராமில் அது போன்று படங்களை பகிர முடியாமல் இருந்தது. எனவே நாங்கள் இதற்கான தீர்வை தறுவதற்கு உறுதிசெய்ய வேண்டும்" என்று நாங்கள் நினைக்குறோம் என்று கூறியுள்ளார்.
குறிப்பாக நீங்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் அதன் சமீபத்திய அப்டேட்களை கண்காணிக்கிறீர்கள் என்றால் மொஸ்ஸெரி கூறியது குறித்து உங்களுக்கு தெளிவாக புரியும். மேலும் இதன் அப்டேட் மூலம் 9:16 வடிவத்தில் புகைப்படங்களை பதிவிட முடியும். இன்ஸ்டாகிராம் அதன் வீடியோவை மையமாகக் கொண்ட அணுகுமுறையில் கவனம் செலுத்தி வருவதால், இது போன்று போட்டோக்களுக்கு தர கூடிய அப்டேட் என்பது மக்களை இன்னும் மகிழ்ச்சியை தருகிறது. எனவே, 9:16 வடிவில் உள்ள படங்களைக் ஸ்டோரியாக பயன்படுத்துவதற்கான விருப்பத்தை வழங்குகிறது. இது 24 மணிநேரத்திற்குப் பிறகு மறைந்துவிடும். எனவே இந்த அம்சத்தை படங்களுக்கு வழங்குவதால் அவை அப்படியே இருக்கும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, இப்போது வரக்கூடிய பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் 9:16 விகிதத்தில் புகைப்படங்களைக் எடுக்க கூடிய வசதியானது அனுமதிக்கின்றன. நாட்ச் மற்றும் பஞ்ச்-ஹோல்-லேடன் ஸ்மார்ட்போன் வகைகளுக்கு இது பெரிதும் தேவைப்படுகிறது. எனவே, இனி தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப புகைப்படங்களைக் கிளிக் செய்யலாம் மற்றும் சிறந்த படங்களை பதிவேற்றவும் செய்யலாம். இதற்கு சிறப்பான எந்த எடிட்டிங்கும் இனி தேவையில்லை.
புகைப்படங்களை அதிக அளவில் பதிவிடும் இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு இது போன்ற அப்டேட் மிகவும் உதவியாக இருக்கும். மேலும் அவர்கள் எல்லா வகையான புகைப்படங்களையும் எந்த வித தடையும் இல்லாமல் பதிவேற்றம் செய்யலாம் என்று இன்ஸ்டாகிராம் தரப்பில் தெரிவித்து உள்ளனர். இனி வரும் காலங்களில் வீடியோக்களுக்கு தர கூடிய முக்கியத்துவத்தை புகைப்படங்களுக்கும் தர போவதாகவும் இந்நிறுவனம் கூறியுள்ளது. இது இன்ஸ்டாகிராம் யூசர்களுக்கு மகிழ்ச்சியை தர கூடிய ஒரு விஷயமாக நிச்சயம் இருக்கும்.
Comments
Post a Comment