Benefits of Socaked Fenugreek Extract: வெந்தயத்தை இரவில் ஊறவைத்து, அந்தத் தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் அருந்துவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
- ஆரோக்கியத்திற்கு அடிப்படையாகும் வெந்தயத் தண்ணீர்
- நீரிழிவுக்கு உகந்தது வெந்தய நீர்
- கொலஸ்ட்ராலை குறைக்கும் ஸ்பெஷல் தண்ணீர்.
மிகவும் சுலபமாக கிடைக்கக்கூடிய வெந்தயத்தில் பலவிதமான நற்குணங்கள் நிறைந்தது. வெந்தய விதைகளை இரவில் ஊறவைத்து, அந்தத் தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் அருந்துவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தினசரி வெறும் வயிற்றில் சாப்பிடும் முதல் விஷயம், நமது வளர்சிதை மாற்ற விகிதத்தை நாள் முழுவதும் பராமரிக்கும். நமது வயிற்றுக்குள் செல்லும் முதல் உணவு, நீண்ட நேரமாக காலியாக உள்ள வயிற்றில் உருவாகியுள்ள அமிலத்தை சீர் செய்து, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வேலை செய்வதற்கு உதவுகிறது. வெந்தய விதைகள் இந்திய சமையலறை அஞ்சறைப் பெட்டியில் கிடைக்கும் சாதாரணமான மசாலா என்றாலும், இது நமது ஆரோக்கிய வாழ்க்கைக்கு சுவை சேர்க்கும் அற்புதமான பொருள்.
பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள வெந்தயத்தை தொடர்ந்து உட்கொள்ளும்போது செரிமான அமைப்பை மேம்படுகிறது. உடல் எடையை பராமரித்து, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பல சுகாதார நிலைமைகளுக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ள வெந்தயத் தண்ணீர் பலவிதமான நோய்களுக்கு இயற்கையாக சிகிச்சை அளிக்கும் அற்புதமான மருந்தாக அமைகிறது.
வெந்தயத்தை ஊற வைத்த தண்ணீரை, காலையில் வெறும் வயிற்றில் பருகுவதால் ஏற்படும் 5 ஆரோக்கிய நன்மைகளின் பட்டியல் இது...
செரிமானத்திற்கு உதவுகிறது
ஊறவைத்த வெந்தய விதைகளை உட்கொள்வதால் ஏற்படும் மிக முக்கியமான ஆரோக்கிய நன்மைகளில் ஒன்று, இது உடலின் செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. வெந்தய விதைகள் செரிமானத்திற்கு உதவும் ஆன்டாசிட்களின் இயற்கையான ஆதாரங்கள்.
எனவே, அசிடிட்டி, வாயு மற்றும் வயிற்று உப்புசம் போன்ற செரிமான பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள், வெந்தயம் ஊறவைத்த தண்ணீரை தினசரி குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துகிறது
அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு வெந்தயம் சிறந்தது. வெந்தயத்தில் உல்ள ஃபிளாவனாய்டுகள் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் (எல்டிஎல்) அளவைக் குறைக்க உதவுகின்றன. அதிக கொலஸ்ட்ரால் அளவுகளால் பாதிக்கப்பட்டிருந்தால், தினமும் வெறும் வயிற்றில் ஊறவைத்த வெந்தய நீரை குடிக்கவும்.
மாதவிடாய் வலியை சமாளிக்க உதவுகிறது
வெந்தயத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் பெண்களின் மாத விடாய் காலத்தில் ஏற்படும் பல சிக்கல்களைப் போக்க உதவுகின்றன. வெந்தயத் தண்ணீரில் உள்ள ஆல்கலாய்டுகள் இதற்கு உதவுகிறது.
எடை இழப்பை ஊக்குவிக்கிறது
வெந்தயத்தை ஊற வைத்தத் தண்ணீர், எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கும் சிறந்தது. இது உடலின் மெட்டபாலிச விகிதத்தை அதிகரித்து, உடலில் வெப்பத்தை உருவாக்கி, உடல் எடையை குறைக்க உதவுகிறது.
தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு அவசியம்
வெந்தய விதைகளை ஊறவைத்த தண்ணீர் உடலுக்கு மட்டுமல்ல, அழகுக்கும் ஏற்றது. தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கும் நன்மைகளை வழங்கும் வெந்தயத் தண்ணீரில் டியோஸ்ஜெனின் உள்ளது, இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே, தினசரி வெந்தயத் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பது, சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைப்பதுடன், தலைமுடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.
Comments
Post a Comment