Beer Sneakers : இணையத்தை கலக்கும் பீர் நிரப்பிய ஷூ - என்ன ஸ்பெஷல்?
- Get link
- X
- Other Apps
ஹைனெகென் நிறுவனத்தின் ஹைனெகென் சில்வர் பீர் மிகவும் பிரபலம். அதனை வைத்து தான் இந்த பீர் நிரம்பிய ஸ்னீக்கர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன
ஹைனெகென் நிறுவனத்தின் ஹைனெகென் சில்வர் பீர் மிகவும் பிரபலம். அதனைக் கொண்டு தான் இந்த பீர் நிரம்பிய ஸ்னீக்கர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதாவது இந்த ஸ்னீக்கர்களில் நிரப்பப்பட்டிருப்பது ஹைனெகென் சில்வர் பீர் தான்.
இதன் பெயர் ஹைனெகிக்ஸ். பச்சை, சில்வர், சிகப்பு ஆகிய நிறங்கள் இந்த ஸ்னீக்கர்களில் முதன்மையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்னீக்கர்களிலிருந்து பீர் சிந்தாமல் இருக்க, சர்ஜிகல் இன்ஜெக்ஷன் முறையில் பானத்தை உள் செலுத்தியுள்ள நிறுவனம், அவை வெளியேறாதவாறு அமைத்துள்ளனர்.
இந்த ஸ்னீக்கர்களை பயன்படுத்துபவர்களுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்கிறது நிறுவனம். காரணம், உள்ளே நிரப்பப்பட்டுள்ள பீர் நாம் நடக்க நடக்க மேலும் கீழும் அலையாடுவதால் கனமும் அதற்கேற்றவாறு ஏரி இறங்கும். இந்த பீரை நாம் அருந்த முடியாது என்றாலும், அதன் மீது நடக்கும் அனுபவம் எல்லா நேரத்திலும் கிடைக்காது என விளமபரப்படுத்தி வருகிறது நிறுவனம்.
இந்த புதிய வகை ஷூக்கள் லிமிடட் எடிஷன் என அறிவித்துள்ளது நிறுவனம். இப்போதுவரை 32 மாதிரிகளை தயாரித்துள்ள நிறுவனம், ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் இவை சந்தைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த ஸ்னீக்கர் குறித்த அறிவிப்பு வந்தவுடன் நெட்டிசன்கள் பலரும் தங்களுக்கு இந்த ஸ்னீக்கர் வேண்டும் என ஆர்வம் காட்டி வருகின்றனர். எனினும் இதற்குள் இருக்கும் பீரை ஒரு முறை வெளியேற்றிவிட்டால் மீண்டும் நிரப்பிக்கொள்ளலாமா என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment