நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

8 மனைவிகளுக்கும் ஒரு அரண்மனை; டைம் டேபிள் போட்டு காதல் செய்யும் நபர்!

 பலதார மணம்: ஒரே நேரத்தில் 9 பெண்களை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய மாடல் ஆர்தர் உர்சோ, தனது மனைவிகளுடன் வாழ 7500 சதுர அடியில் அரண்மனையை கட்டி வருகிறார்.


  • ஆர்தர் உர்சோ செய்த 9 திருமணங்கள்
  • ஆர்தரின் வீட்டின் சுவர் ஒன்றில் பேய் (அசுரன்) என்று யாரோ எழுதியுள்ளனர்.
  • ஆர்தரின் குடும்பத்திற்கு வரும் அச்சுறுத்தல்கள்.

பிரபல பிரேசிலிய மாடல் மற்றும் செல்வாக்கு மிகுந்த ஆர்தர் உர்சோவுக்கு (Arthur O Urso) எட்டு மனைவிகள் உள்ளனர். அவர் ஒன்று அல்லது இரண்டு இல்லை, அனைத்து மனைவிகளும் அவருடன் வாழ்கின்றனர். அவர்களுக்காக ஆர்தர் உர்சோ 7500 சதுர அடியில் ஒரு ஆடம்பரமான அரண்மனையைக் கட்டுகிறார், அதற்கு அவர் 'Mansion of Free Love' என்று பெயரிட்டார்.

ஆர்தர் உர்சோ செய்த 9 திருமணங்கள்

மாடலும் செல்வாக்கு பெற்றவருமான ஆர்தர் உர்சோ 2021 ஆம் ஆண்டில் ஒரே நேரத்தில் 9 பெண்களை திருமணம் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இருப்பினும், பின்னர் ஆர்தரின் மனைவிகளில் ஒருவர் அவரை விவாகரத்து செய்தார். ஏனெனில் அவர் தனது கணவரை வேறு எந்த பெண்ணுடனும் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை.

ஆர்தரின் திருமணங்கள் செல்லாது

இருப்பினும், ஆர்தர் ஓ உர்சோவின் இந்த திருமணங்கள் அதிகாரப்பூர்வமாக செல்லுபடியாகாது, இது சட்டப்பூர்வமான திருமணம் இல்லை. ஏனெனில் பிரேசிலில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்வது சட்டத்திற்கு எதிரானது. ஆனால், ஆர்தர் தனது வாழ்க்கையில் மிகவும் உற்சாகமாக இருக்கிறார், அவருடைய மனைவிகளும் அவருடன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

ஆர்தரின் குடும்பத்திற்கு வரும் அச்சுறுத்தல்கள் 

ஆர்தர் ஓ உர்சோவின் இந்த வாழ்க்கை முறையால் பலர் அவர் மீது அதிருப்தியிலும் கோபத்திலும் உள்ளனர். மேலும் சிலர் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். ஆர்தரின் வீட்டின் சுவர் ஒன்றில் பேய் (அசுரன்) என்று யாரோ எழுதியுள்ளனர். அவரது வீட்டுச் சுவரில், 'அரக்கக் குடும்பமே, போங்கள், நாங்கள் உங்களை வரவேற்க மாட்டோம்' என்று எழுதப்பட்டிருந்தது. இதைப் பற்றி ஆர்தர் கூறுகையில், இது சுவரில் எழுதப்பட்ட நாள் மிகவும் ஏமாற்றமாக இருந்தது. எங்களுக்கு அமைதி தேவை. காலையில் கட்டுமான குழுவினர் வந்தவுடன் கேட்டை திறந்தபோது சுவரில் யாரோ இப்படி ஒரு செய்தியை எழுதியிருப்பது தெரிய வந்தது என்றார்.

காதல் செய்ய டைம்டேபிள்

அனைத்து மனைவிகளுக்கும் நேரம் கொடுப்பது ஆர்தர் ஓ உர்சோவுக்கு எளிதானது அல்ல, இதற்காக அவர் செக்ஸ் டைம் டேபிளை தயாரித்துள்ளார். இதன் அடிப்படையில் மனைவிகளுடன் நேரத்தை செலவிட்டு கால அட்டவணையின் அடிப்படையில் காதல் செய்கிறார். ஆர்தர் சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவ் ஆக இருக்கிறார். தனது மனைவிகளுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!