’மக்களே தயவு செய்து குடிங்க’ மன்றாடும் ஜப்பான் அரசு; காரணம் இதுதான்.......
- Get link
- X
- Other Apps
வரி வருவாய் குறைந்துவிட்டதால், மக்கள் அதிக குடிக்க வேண்டும் என ஜப்பான் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மது மூலம் கிடைக்கும் வரி வருவாய் ஜப்பானில் குறைந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதால் அதனை அதிக்கபடுத்த அந்நாட்டு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. மக்களிடையே மது அருந்தும் பழக்கத்தை ஊக்குவிக்க புதிய திட்டங்களையும் ஜப்பான் அறிமுகப்படுத்த தொடங்கியுள்ளது. இதற்காக பிரத்யேகமாக சேக் விவா என்ற பிரச்சாரத்தை அந்நாட்டின் தேசிய வரி நிர்வாகம் தொடங்கியுள்ளது. மேலும், 20 வயதிலிருந்து 39 வயதுள்ள ஜப்பானியர்களிடம் நாட்டு மக்களிடையே குடிப்பழக்கத்தை அதிகரிக்க என்ன செய்யலாம்? என அரசாங்கம் சார்பில் யோசனைகள் கேட்கப்பட்டுள்ளன.
சிறந்த யோசனைகளை வழங்குபவர்களுக்குப் பரிசு மற்றும் விருது வழங்கி கவுரவிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி செப்டம்பர் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. கொரோனாவிற்கு பின்பு மாறிய வாழ்க்கைமுறை காரணமாகவே ஜப்பானில் மதுக் குடிக்கும் பழக்கம் குறைந்துள்ளது. அதற்கு முன்னரே படிப்படியாக ஜப்பான் மக்களிடையே இருந்த குடிப்பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வந்தது. 1995-ம் ஆண்டு காலகட்டத்தில் ஜப்பானில் சராசரியாக ஒரு வருடத்திற்கு ஒரு நபர் 100 லிட்டர் மது அருந்திவந்துள்ளார். அதுவே 2020-ம் ஆண்டு ஒரு நபர் வெறும் 75 லிட்டர் மட்டுமே மது அருந்தும் அளவுக்குக் குறைந்துள்ளது.
2011- ம் ஆண்டு ஜப்பானின் வரி வருவாயில் 3% சதவீதம் மது விற்பனையிலிருந்து வந்துள்ளது. அது 2020-ம் ஆண்டு 1.7% சதவீதமாக மாறியுள்ளது. இதனால் பல நூறு கோடிகள் நஷ்டம் ஜப்பான் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு முன்பு வரை சக ஊழியர்கள் மற்றும் சக வியாபாரிகளிடம் உள்ள உறவை மேம்படுத்தப் பெரும்பாலானோர் வெளியில் சென்று ஒன்றாக மது அருந்தி வந்தனர். கொரோனாவிற்கு பின்பு வீட்டிலிருந்தே பணிபுரியும் வொர்க் புரம் ஹோம் வழக்கம் அதிகமாகியுள்ளதால் வெளியில் சென்று மது அருந்துவது தேவையா என்று எல்லோரும் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையை மாற்ற புதிய யுக்திகளை கையில் எடுத்திருக்கிறது ஜப்பான் அரசு. உலக நாடுகள் ஜப்பானின் இந்த முடிவை வியப்பாக பார்க்கத் தொடங்கியுள்ளன.
ALSO READ : ஊழியரை சேஸிங் செய்யும் ராட்சத முதலை; பதைபதைக்க வைக்கும் வீடியோ.......
- Get link
- X
- Other Apps



Comments
Post a Comment