நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஊழியர்களுக்கு கூல்டிரிங்ஸ், சிப்ஸ் தரும் ரோபோட்… கூகுள் அசத்தல் முயற்சி!

 Alphabet Inc இன் கூகுள் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு காபி, சிப்ஸ் பரிமாற ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபோட்டை உருவாக்கி உள்ளது.


கூகுள் நிறுவனம் தொழில்நுட்பத்தின் ஜாம்பவான் என்றே கூறலாம். புது புது தொழில்நுட்பத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவகையில் கூகுள் நிறுவனம் ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் ( Artificial Intelligence) தொழில்நுட்பங்களுடன் கூடிய ரோபோட்டை உருவாக்கி உள்ளது. இந்த ரோபோட் ஊழியர்களுக்கு காபி, சிப்ஸ் போன்ற உணவுகளை பிரேக்ரூமிலிருந்து எடுத்து கொடுத்து உதவுகிறது. ஊழியர்கள் தங்கள் ஓய்வுநேரத்தில் கேட்கும் உணவுகளை எடுத்து கொடுத்து உதவுகிறது.

ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் தொழில்நுட்பம் உள்ள இந்த ரோபோட் உரையாடல் திறன் உடையது. கண்கள் மற்றும் கைகளை கொண்டு இந்த ரோபோட்கள் மெக்கானிக்கல் வெயிட்டர்கள் போல செயல்படுகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோட்களுக்கு தகுந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.


அதேநேரத்தில் இந்த ரோபோட்கள், கூகுள் ரோபோக்கள் விற்பனைக்கு இல்லை என்றும். விற்பனைக்கு தயாராக இல்லை என்றும் கூறியுள்ளது. இந்த ரோபோட்கள் சில எளிய செயல்களை மட்டுமே செய்து வருகின்றன. மைக்ரோசாஃப்ட், அமேசான் ஆகியவை ரோபோட்கள் தொடர்பான ஆகியவை ரோபோட்கள் தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

கூகுள் ரோபாட்டிக்ஸ் ஆராய்ச்சியின் மூத்த இயக்குனர் வின்சென்ட் வான்ஹூக் கூறுகையில், ” ரோபோட்கள் நம் கட்டளைகளை ஏற்று நடக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. அதனுடைய இன்புட் திறமைக்கு ஏற்றவாறு செயல்படுகிறது.

விக்கிப்பீடியா, சமூக ஊடகங்கள் மற்றும் பிற வலைதளங்களிலிருந்து உலகத்தை பற்றிய அறிவு மற்றும் புரிதலை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இதுபோன்ற ரோபோட்கள் பயன்படுத்தப்படவில்லை” என்று தெரிவித்தார்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!