நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பாம்பை நடக்க வைத்த இளைஞனின் கண்டுபிடிப்பு....இணையத்தில் வைரல்...

 2.1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த காணொளியைப் பலரும் வியப்புடன் ரசித்து வருகின்றனர்


யூடியூப்யில் காணொளியை உருவாக்கிப் பதிவிடும் யூடியூப்பர் ஒருவர் பாம்புக்கு நவீன முறையில் ரோபோடிக் கால்களை உருவாக்கி அதில் பாம்பை நடக்க வைத்து காணொளியைப் பதிவிட்டுள்ளார்.

ஆலன் பான் என்ற ஒரு யூடியூப்பர் தனது யூடியூப் சேனலில் பாம்பை நடக்க வைக்க ஒரு புது விதமான நவீன ரோபோடிக் கால்களை உருவாக்கி அதனைப் பாம்புக்குப் போட்டு நடக்க வைத்து வெற்றி பெற்றுள்ளார்.

பாம்புகள் மேல் ஆர்வம் கொண்ட அந்த நபர் அதனை நடக்க வைப்பதிலும் ஆர்வமாக இருந்துள்ளார். அவர் நவீன ரோபோடிக் கண்டுபிடிப்புகளைச் செய்து அதனைக் காணொளியாகப் பதிவிடுவார். அந்த வகையில் தற்போது அவரின் புதிய முயற்சி இணையத்தைக் கலக்கி வருகிறது.

இணையத்தில் பெருமளவு கவனத்தை ஈர்த்த பாம்பு நடக்கும் காணொளியை அவர் உருவாக்கப் பலநாள் பெற்றுள்ளது. முதலில் பாம்புக்குப் பிறவியில் கால் இருந்தது என்று அவர் தெளிவுப்படுத்திகொள்கிறார். அதனை அவர் ரோபோடிக் முறையில் மறுபடியும் கொண்டுவர விரும்பி தற்போது உண்மையில் நவீன கால்களைக் கொடுத்துள்ளார்.


இந்த வகையில் பாம்புக்கு ரோபோ கால்களைச் செய்யத் தேவையான ஆராய்ச்சிகளையும் செய்துள்ளார். ஓநாய் போன்ற உயிரினங்களில் நடக்கும் தன்மையை ரோபோவிற்கு அளித்து அதில் பாம்பை வைத்து நடக்க வைத்துள்ளார். அந்த ரோபோ, நீண்ட குழாயில் இரண்டு பக்கம் கால்களை வைத்து வடிவமைக்கப்பட்டு இருக்கும். மேலும் அது ரிமோட் மூலம் இயங்கும் வகையில் உள்ளது.

இந்த காணொளி பதிவேற்றப்பட்டு இரண்டு நாட்களே ஆன நிலையில் தற்போது 2.1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இயற்கைக்கு மாறான இந்த நிகழ்வைப் பலரும் வியப்புடன் ரசித்தும் அதே நேரம் பாம்புகள் ஊர்ந்து செல்வதே அதற்கு பலம் என்றும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் இந்த செயலை பாராட்டியும் வருகின்றனர்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்