நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உலகிலேயே மிகப்பெரிய சிலந்தி பற்றி ஆச்சர்யப்பட வைக்கும் உண்மைகள்!

 கோலியாத் சிலந்திக்குள் இருக்கும் நியூரோடாக்சின் மனிதர்களுக்கு ஆபத்தானது அல் என்றாலும், அதன் ஸ்டிங் மிகவும் வலி நிறைந்தது.


பாம்புகளைப் போலவே சிலந்தியைப் பார்த்தாலே பயந்து ஓடக்கூடிய மனிதர்கள் ஏராளம் உண்டு. நம் ஊரில் எப்படி கரப்பான்பூச்சியை பார்த்தாலே பலரும் அலறுவார்களோ, அதைப் போல் வெளிநாடுகளில் சிலந்தியைக் கண்டு அஞ்சி நடுங்குபவர்கள் ஏராளம். ஏனெனில் பலவகையான சிலந்திகள் விஷத்தன்மை கொண்டவையாகவும், அதன் கடி தோல் அலர்ஜியை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருப்பதால் தான். அதேசமயம் சில குறிப்பிட்ட சிலந்திகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கும் பழக்கமும் வெளிநாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது.

உலகிலேயே மிகச்சிறிய அளவிலான சிலந்திகளைப் போலவே உலகிலேயே மிகப்பெரிய சிலந்தியும் உள்ளது. கோலியாத் எனப்படும் சிலந்தி உலகிலேயே மிகப்பெரிய சிலந்தி என அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுகிறது. டரான்டுலா குடும்பத்தைச் சேர்ந்த இது, பறவைகளை உண்ணும் அளவுக்கு பெரிய சிலந்தி ஆகும்.

வடக்கு தென் அமெரிக்காவின் மழைக் காடுகளிலும், அமேசான் மழைக்காடுகளிலும் காணப்படுகிறது. 175 கிராம் வரை எடையும், நேரான கால்களுடன் 30 செ.மீ நீளம் வரை நீட்டவும் முடியும். இதன் எடை 175 கிராம் கணக்கிடப்பட்டுள்ளது. கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின் படி, தென் அமெரிக்காவில் 50 கிராமும் எடையும், 10 ஆண்டுகள் ஆயுட்காலமும் கொண்ட கோலியாத் சிலந்தி மிகப்பெரியது என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஈரமான நிலப்பரப்பிலும், புல்வெளிகளிலும் வசிக்ககூடிய இது இரவு நேரத்தில் வேட்டையாடக்கூடியது. பார்த்தாலே பீதி அடைய வைக்கும் தோற்றமும், சிறப்பான தாக்கும் திறனும் கொண்டது. கோலியாத் சிலந்தியின் எட்டு கால்கள் கூர்மையான குச்சிகளைப் போல் இருக்கும். இதனைக் கொண்டு தான் தன்னை தாக்க வரும் உயினங்களிடம் இருந்து தற்காத்து கொள்ளவும் மற்றும் உணவுக்காக வேட்டையாடவும் செய்கின்றன.


இந்த உயிரினம் யாரோ தன்னை அச்சுறுத்துவதாக உணர்ந்தால், அவற்றின் பின்னங்கால்களை இணைத்து ஒன்றுடன் ஒன்று தேய்க்கத் தொடங்கும், கால்களை மெதுவாக வயிற்றுப் பகுதிக்கு கொண்டு வரும். இது எதற்கு என்றால், எதிரி தனது அருகே வந்தவுடன், அது தனது ரோமம் போன்ற முட்களால் அவர்களைக் குத்த தயாராவதை குறிக்கிறது.

கோலியாத் சிலந்திக்குள் இருக்கும் நியூரோடாக்சின் மனிதர்களுக்கு ஆபத்தானது அல் என்றாலும், அதன் ஸ்டிங் மிகவும் வலி நிறைந்தது. இதன் மூலம் மனிதனின் தோலில் அதன் குச்சியை நுழைத்து கடிக்கிறது, ​​அந்த விஷமானது உள்ளே ஆழமாக ஊடுருவி, அந்த நபரின் தோல், கண்கள் மற்றும் சளி சவ்வுகளில் கடுமையான வலியை ஏற்படுத்துகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மயக்கமடையவும் வாய்ப்புள்ளது. 15 அடி தூரத்திற்கு கேட்க கூடிய நூதன முறையில் ஒலியை வெளிப்படுத்துகிறது.

இந்த ஒலியானது, சிலந்திக்கு அருகில் மனிதன் அல்லது விலங்குகளின் நடமாட்டம் இருப்பதை சுட்டிக்காட்ட பயன்படுகிறது. தரையில் வசிக்க கூடிய பூச்சி இனமான இது, தவளைகள், பல்லிகள் மற்றும் சிறிய வகை பாம்புகளை வேட்டையாடக்கூடியது. பெண் சிலந்திகளின் சராசரி ஆயுட்காலம் 15 முதல் 25 வருடங்களும், ஆண் சிலந்திகளின் சராசரி ஆயுட்காலம் 3 முதல் 6 வருடங்களும் ஆகும். பெண் சிலந்திகள் தங்களது வாழ்நாள் முழுவதும் சராசரியாக 100 முதல் 200 முட்டைகள் வரை ஈடுகின்றன.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்