நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

போன் இல்லாமல் இனி லேப்டாப்பில் வாட்ஸ்அப் பயன்படுத்தலாம்.. பிரத்யேக ஆப் அறிமுகம்!

 நேட்டிவ் வாட்ஸ்அப் விண்டோஸ் ஆப் மூலம் போன் இல்லாமல் லேப்டாப்பில் வாட்ஸ்அப் பயன்படுத்தலாம். நேட்டிவ் வாட்ஸ்அப் விண்டோஸ் ஆப் பிரத்யேகமாக லேப்டாப், கணினிக்குகென்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


வாட்ஸ்அப் நிறுவனம் தங்களது பயனர்களுக்கு புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் புதிதாக நேட்டிவ் வாட்ஸ்அப் விண்டோஸ் ஆப் (The native WhatsApp Windows app) அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னதாக பீட்டா வெர்ஷனில் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது அனைத்து பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நேட்டிவ் வாட்ஸ்அப் விண்டோஸ் ஆப் லேப்டாப், கணினியில் பயன்படுத்த கொண்டு வரப்பட்டுள்ளது. முன்பு லேப்டாப், கணினியில் வாட்ஸ்அப் பயன்படுத்த வாட்ஸ்அப் வெப் உபயோகிக்கப்படும். இதில், போன் மூலம் கியூ ஆர் கோட் ஸ்கேன் செய்து பயன்படுத்தப்பட்டது. தற்போது பிரத்யேகமாக லேப்டாப், கணினிக்குகென்று நேட்டிவ் வாட்ஸ்அப் விண்டோஸ் ஆப் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் போன் பயன்படுத்தி ஸ்கேன் செய்ய வேண்டியது இல்லை.

இதுகுறித்து வாட்ஸ்அப் நிறுவனம் கூறுகையில், வாட்ஸ்அப் வெப் மற்றும் பிரவுசரில் பயன்படுத்தும் வாட்ஸ்அப்பை விட நேட்டிவ் வாட்ஸ்அப் விண்டோஸ் ஆப் வேகமாக செயல்படும். உங்கள் போன் ஆஃப்லைனில் இருந்தாலும் வாட்ஸ்அப் தகவல்கள் உங்களுக்கு வந்துவிடும்.

MacOS -க்கும் இந்த ஆப் கொண்டு வரப்பட்டுள்ளது. பீட்டா வெர்ஷனில் இது உள்ளது. விரைவில் அனைத்து பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும்.

எப்படி டவுன்லோட் செய்வது?

உங்கள் லேப்டாப், கணினியில் நேட்டிவ் வாட்ஸ்அப் விண்டோஸ் ஆப் டவுன்லோட் செய்ய வேண்டும் என்றால் மைக்ரோசாப்ட் ஸ்டோர் (Microsoft Store) சென்று வாட்ஸ்அப் டெஸ்க்டாப் (WhatsApp Desktop)எனக் கொடுத்து டவுன்லோட் செய்யலாம்.

அண்மையில் வாட்ஸ்அப் 3 புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியது. நோட்டிபிகேஷன் கொடுக்காமல் குரூப்பிலிருந்து வெளியேறுவது, ‘View once’ மெசேஜை ஸ்கிரின்சாட் எடுக்க முடியாது, online status காண்பிப்பதை நிர்வகிப்பது என 3 அம்சங்களை அறிமுகப்படுத்தியது.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!