பொதுவாக ஆப்பிளில் விட்டமின் , மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உடலுக்கு மிகவும் நன்மைகள் அளிக்கக் கூடியவை.
ஆப்பிளின் தோலில் இருக்கும் சத்துக்கள் உடலில் அனைத்துவிதமான நோய் எதிர்ப்பு செல்களையும் தூண்டுகின்றன.
அதுவும் க்ரீன் ஆப்பிளில் உள்ள சத்துக்கள் சிவப்பு ஆப்பிளை விட அதிகம் என கூறுகின்றனர். தினமும் க்ரீன் ஆப்பிள் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.
- க்ரீன் ஆப்பிளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நம்முடைய உடலின் மெட்டபாலிசத்தை முறைப்படுத்தி அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் உண்டாகாமல் தடுக்க உதவுகிறது.
- க்ரீன் ஆப்பிளில் உள்ள ஆன்டி- ஆக்சிடண்ட்டுகள் உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்களை வெளியேற்றி உடலின் உள்ளுறுப்புகளை சுத்தம் செய்யும்.
- க்ரீன் ஆப்பிளை தோல் சீவாமல் தோலுடன் சாப்பிடுவது மிகவும் நல்லது. அது கல்லீரலில் ஏற்படும் தொற்றுக்களை சரிசெய்யவும் ஜீரண மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்கவும் உதவுகிறது.
- க்ரீன் ஆப்பிள் உள்ள அதிக அளவிலான நார்ச்சத்துக்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்டிராலின் அளவைக் குறைக்கச் செய்கிறது.
- தினமும் க்ரீன் ஆப்பிள் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் சருமத்தில் உண்டாகும் கருந்திட்டுக்கள், எக்ஸிமா போன்ற சரும நோய்கள் வராமல் தடுக்க முடியும். முக்கியமாக சரும புற்றுநோய் வராமல் தடுக்கும்.
- க்ரீன் ஆப்பிளில் இருக்கும் ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் இளமையிலேயே வயதான தோற்றத்தை தருவதை தடுத்து நிறுத்துகிறது.
- நீங்கள் முகத்தை சுத்தம் செய்ய பயன்படுத்தும் பேஸ் வாஷ் மற்றும் மாய்ஸ்சரைஸர் போன்றவற்றில் க்ரீன் ஆப்பிள் உட்பொருள்கள் இருப்பதாக பயன்படுத்தும்போது சருமம் அதிக நீரேற்றத்துடன் இருக்கும். அதோடு தினமும் க்ரீன் ஆப்பிள் சாப்பிட்டும் வரலாம்.
- க்ரீன் ஆப்பிளில் உள்ள சில முக்கிய ஊட்டச்சத்துக்கள் தலைமுடியை உறுதியாக்கவும் வளர்ச்சியை தூண்டவும் உதவுகிறது. அதோடு தலைமுடியின் வேர்க்கால்களை உறுதியாக்கி முடியின் அடர்த்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.
- க்ரீன் ஆப்பிளில் உள்ள கால்சியம் எலும்புகளை உறுதியாக்கவும் தேய்மானத்திலிருந்து பாதுகாக்கவும் உதவும்.
- க்ரீன் ஆப்பளில் அதிகப்படியான அளவு நார்ச்சத்துக்கள் இருக்கின்றன. அதனால் இது எடை இழப்பை தூண்டும்.
Comments
Post a Comment