நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சுடச் சுட பிரெட் வடை செய்வது எப்படி?

 டீ, காபியுடன் சாப்பிட சூப்பரான பிரெட் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

இந்த வடையை செய்ய 10 நிமிடங்களே போதுமானது.

தேவையான பொருட்கள்

  1. பிரெட் துண்டுகள் - 6
  2. உளுத்தம் பருப்பு - 100 கிராம்
  3.  வெங்காயம் - 2
  4. இஞ்சி - சிறு துண்டு
  5.  பச்சை மிளகாய் - 1
  6. கறிவேப்பிலை - சிறிதளவு
  7.  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கிகொள்ளவும். பிரெட்டை பொடித்துக் கொள்ளவும்.

 உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் களைந்து.

உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும்.

 அரைத்த மாவுடன் பிரெட் தூள், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு பிசையவும். 

கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

இப்போது சூப்பரான பிரெட் வடை ரெடி.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்