நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இரவில் தூக்கம் வராம அவதிப்படுறீங்களா? இதை ட்ரை பண்ணி பாருங்க!

 இரவில் தூக்கமிண்மை பிரச்சனை உங்கள் அன்றாட சுறுசுறுப்பான வாழ்க்கையை பாதிப்பதுடன், இருதயம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளிட்ட பல உடல் உபாதைகளுக்கு காரணமாக அமையும். 


  • இரவில் தூக்கமின்மை பிரச்சனை உள்ளதா?
  • இருதய நோயிக்கு காரணமாக அமையும்
  • ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்.

நம்மில் பலருக்கும் இரவு நேரங்களில் என்னதான் புரண்டு புரண்டு படுத்தாலும் தூகம் என்பது வரவே வராது. பகல் நேரத்தில் இருக்கும் ஒரு புத்துணர்ச்சி இரவிலும் இருக்கும். ஆனால் அடுத்த நாள் காலை எழுந்தால் மிக சோர்வாகவும், வேலைகளில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். இதற்கு முக்கியமான சில காரணங்கள் இருக்கின்றன. இரவு தூங்க செல்லும் நேரம் வரை மொபைல் ஃபோன் பயன்படுத்துவது முக்கிய காரணம். நாம் தொடர்ந்து அப்படி செய்யும்போது மூளை தனது வேலையை இரவில் மேலும் சுறுசுறுப்பாக நினைக்கும். மேலும் விழித்திரையில் பாதிப்பு ஏற்படும்.

இதேபோல, இரவு உணவு உட்கொண்டு சூடாக பால் அல்லது தண்ணீர் குடித்து விட்டு சீக்கிரமாக தூங்கி பகலில் சீக்கிரமாக விழிக்கும் பழக்கத்தை கொண்டுவர வேண்டும். இவை அனைத்தும் நம் அன்றாட பழக்க வழக்கத்தில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் என்றால் சிலர் என்ன செய்தாலும் இரவில் தூக்கம் வருவது இல்லை எனக்கூறுவார்கள். மருத்துரை அனுகி உறக்கத்திற்கான மருந்தையும் உட்கொள்வார்கள். சிலர் இந்த தூக்கம் இன்மை பிரச்சனையால் மன நோயாளியாக மாறும் நிலையும் ஏற்படும். இதற்கு மருந்து மாத்திரைகளை உட்கொள்ளமால் நம் வீட்டிலேயே மேற்கொள்ளும் சில வைத்தியங்களை பார்த்தலாம். 

தூக்கமின்மை பிரச்சனையால் வரும் விளைவுகள் 

இரவில் நீண்ட நாட்கள் தூங்காமல் இருந்தால் மன அழுத்தம் அதிகரித்து மன நோய் வர வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அது மட்டுமின்றி இருதய நோய், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடும் எனவும் ஆய்வுகள் கூறுகின்றன. அது மட்டுமின்றி தூங்காமல் இருந்தால் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் சரி, பணிக்கு செல்லும் பெரியவர்களும் சரி தங்களின் வேலையில் முழுமையான பங்களிப்பை வழங்க முடியாத நிலை ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. 

கசகசா பால் 

சமையலறையின் அஞ்சரை பெட்டியில் இருக்கும் ஒரு முக்கிய பொருள் கசகசா. ஆய்வுகளின் படி கசகசா கலந்த பாலை குடிப்பதன் மூலம் தூக்கமின்மை பிரச்சனை சரி செய்யப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. உடலில் உள்ள கார்டிசோல் அளவை குறைத்து உறக்கமின்மை பிரச்சனையையும் இவை சரிசெய்கிறது. தூங்க செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு கசகசாவை அரைமணி நேரம் ஊறவைத்து அதை அரைத்து காய்ச்சிய பாலில் கலந்து குடித்து விட்டு உறங்க சென்றால் நிம்மதியான உறக்கம் வரும்.


மருதாணி பூ 


மருதாணி இலைகள் போன்று மருதாணி பூக்களும் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டவை. இந்த பூக்கள் மன அழுத்தம் போக்கி நிம்மதியான உறக்கத்துக்கு வழி வகுக்கிறது. மருதாணி பூவை பறித்து தலையணைக்கு கீழே வைத்து உறங்கினால் நல்ல உறக்கம் வரும் என ஆய்வுகள் கூறுகின்றன.


ALSO READ : ஒல்லியாக ஒரு கிளாஸ் தண்ணி போதுமா? இது வேற லெவல் தண்ணீர்!


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்