நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வாழைத்தண்டு பொரியல் சுடச் சுட செய்வது எப்படி! பத்தே நிமிடத்தில் ரெடி....

 முருங்கை கீரையுடன் வாழைத்தண்டை சேர்த்து பொரியல் செய்தால் அருமையாக இருக்கும். 


இந்த ரெசிபையை தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

  1. முருங்கைக்கீரை - 1 கப் 
  2.  வாழைத்தண்டு - சிறிய துண்டு
  3.  வெங்காயம் - 1
  4.  தேங்காய் துருவல் - 2 ஸ்பூன் 
  5.  பச்சை மிளகாய் - 1 
  6.  சிகப்பு மிளகாய் - 1
  7.  கடுகு, உளுத்தம் பருப்பு - தாளிக்க 
  8.  எண்ணெய் - 2 ஸ்பூன் 
  9.  உப்பு - தேவைக்கு


 செய்முறை 

முருங்கைக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.  ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். 

வாழைத்தண்டை நாரை எடுத்து விட்டு மெல்லி துண்டுகளாக நீளவாக்கில் வெட்டி மோரில் போட்டு வைக்கவும். இவ்வாறு மோர் கலந்த நீரில் வாழைத்தண்டு துண்டுகளை போட்டு வைப்பதால் நிறம் மாறாமல் இருக்கும். 


வாணலியை அடுப்பின் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், ப.மிளகாய் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் வாழைத்தண்டு சேர்த்து ஒரு முறை கிளறி விடவும்.

வாழைத்தண்டு சற்று வெந்ததும் முருங்கைக்கீரை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு வேக வைக்கவும். 

இரண்டும் வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும். சுவையும் சத்தும் நிறைந்த முருங்கைக்கீரை வாழைத்தண்டு பொரியல் தயார்.


சாம்பார் மற்றும் ரசம் சாதத்துடன் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.


ALSO READ : உங்களுக்கு உடல் எடையை சீக்கிரமே குறைக்கனுமா? இந்த சூப்பை மறக்காமல் குடிச்சாலே போதும்....



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்