நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சைவ உணவு பிரியர்களே! புரோட்டீன் நிறைந்த ‘இந்த’ உணவுகள் டயட்டில் இருக்கட்டும்

 Protein Rich Food: இறைச்சி உணவுகளில் தான் அதிக புரோட்டின் கிடைக்கும் ஒரு பொதுவான எண்ணம் பெரும்பாலானோருக்கு உள்ளது. 


  • இறைச்சி உணவுகளில் தான் அதிக புரோட்டின் கிடைக்கும் என்ற எண்ணம் பெரும்பாலானோருக்கு உள்ளது.
  • சைவத்திலும் அசைவத்திற்கும் பல புரதச் சத்துகள் நிறைந்த உணவுகள் உள்ளன.
  • தாவர அடிப்படையிலான புரோட்டீன் உணவுகளை அறிந்து கொள்ளலாம்.

உடலுக்கு வைட்டமின்கள் தேவைப்படுவது போல, புரதமும் ஆரோக்கியத்திற்கு அவசியம். உடலில் உள்ள செல்களை சீர் செய்து உடல் வளர்ச்சிக்கு புரதம் உதவுகிறது. புரோட்டீன்கள் உங்கள் உடலில் உள்ள தசை திசுக்களை சரி செய்யும் மேக்ரோநியூட்ரியண்ட்ஸ் . இது செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்ற செயல்பாட்டிற்கு உதவுகிறது என்பதோடு, தொற்றுநோயைத் தடுக்க ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. மூளை, கல்லீரல் மற்றும் தசைகள் புரதத்தால் ஆனது. இதிலிருந்து புரத சத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம். எனவே, நாம் தினமும் உணவில் போதுமான அளவு புரோட்டீன் எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். உங்கள் தினசரி புரத தேவை என்பது உங்கள் எடை, பாலினம், வயது மற்றும் ஆரோக்கியத்தைப் பொறுத்தது. இறைச்சி உணவுகளில் தான் அதிக புரோட்டின் கிடைக்கும் என்ற எண்ணம் பெரும்பாலானோருக்கு உள்ளது. ஆனால், சைவத்திலும் அசைவத்திற்கும் பல புரதச் சத்துகள் நிறைந்த உணவுகள் உள்ளன. இன்று நாம் தாவர அடிப்படையிலான புரோட்டீன் உணவுகளை அறிந்து கொள்ளலாம்.

உங்கள் உடலில் புரதத்தின் அளவு போதுமானதாக இருந்தால், நீங்கள் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை தாக்குதல் ஆகியவற்றைத் தவிர்க்கலாம். உங்கள் வளர்சிதை மாற்றம் சிறப்பாக இருக்கும்.  இதற்கு, சைவ பிரியர்கள் தாவர அடிப்படையிலான புரதத்தை எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் இவற்றில் ஹைஃபோலிக் அமிலம், செலினியம், ஜிங்க், பைட்டோ நியூட்ரியண்ட்ஸ் போன்ற ஊட்டச்சத்துகளும் காணப்படுகின்றன. இது தவிர, நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டின் களஞ்சியமாகவும் இவை உள்ளன.சைவ உணவை உட்கொள்பவர்களுக்கு தாவர அடிப்படையிலான புரதம் மிகவும் முக்கியமானது.

கருப்பு மற்றும் வெள்ளை எள்

எள்ளில் புரதச்சத்து நிறைந்துள்ளது. ஒரு டீஸ்பூன் எள் சுமார் 3 கிராம் புரதத்தை வழங்குகிறது. இதனை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். ஊறவைத்த எள்ளை உட்கொள்வது புரதத்தை அதிகரிக்க உதவுகிறது. கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுப்படுத்துகிறது.

சோயா

சோயாவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, சோயாபீன் என்பது ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களைக் கொண்ட ஒரு தாவரமாகும். அதாவது அவை முழுமையான புரதங்கள். இதில் 36 சதவீதம் முதல் 56 சதவீதம் வரை புரதச்சத்து உள்ளது. இது தவிர, இது ஃபோலேட், கால்சியம், நார்ச்சத்து, இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் சிறந்த மூலமாகும்.

முளைக்கட்டிய பாசி பயறு

பாசி பயறில் புரோட்டின் நிறைந்துள்ளது.  முளை கட்டிய பாசி பயறில் உங்களுக்கு இரட்டை புரதம் கிடைக்கும். இது வலிமையைத் தருகிறது மற்றும் உங்கள் வளர்சிதை மாற்றத்தை சிறப்பாக வைத்திருக்கும். இதில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இதன் காரணமாக செரிமானம் சிறப்பாக இருக்கும்.

பொன்னாங்கண்ணி கீரை, பசலை கீரை

பொன்னாங்கண்ணி, புரதத்துடன், கீரையில் இரும்பு, கால்சியம், மெக்னீசியம், செலினியம் மற்றும் வைட்டமின் கே அளவும் அதிகமாக உள்ளது. இதனுடன் நார்ச்சத்தும் உள்ளது. பசலைக்கீரையில் இரும்புச்சத்து மற்றும் புரதச்சத்தும் நிறைந்துள்ளது.

தானியங்கள்

முளை கட்டிய உளுந்து, வேர்க்கடலை ஆகியவற்றை சாப்பிடுவதன் மூலம் அதிக புரதச்சத்து கிடைக்கும். அவற்றை ஊறவைத்து முளை கட்டும் போது சத்துக்கள் இரு மடங்காகும்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!