நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கரு கருனு தலைமுடி வளர வேண்டுமா? இதோ சில எளிய டிப்ஸ்!

 தலைமுடி ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது.

ஆனால் அத்தகைய முடியானது தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் அதிகம் பாதிக்கப்பட்டு, முடி கொட்டுதல், அடர்த்தி குறைதல் போன்றவை ஏற்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், இன்றைய நவீன காலத்தில் முடியைப் பராமரிக்க நிறைய பொருட்கள் இருக்கின்றன.

இருப்பினும் இது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். எவ்வித பக்கவிளைவுகளுமின்றி எளிய முறையில் முடியை எப்படி கரு கருனு வளர செய்யலாம் என்பதை பார்ப்போம்.


  • வாரம் ஒருமுறை தவறாமல் சூடான எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து, நன்கு ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனால் முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் அடர்த்தி மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும்.

  • வாரம் ஒருமுறை முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு முடியை நன்கு மசாஜ் செய்து உலர வைத்து குளிக்க வேண்டும். இதனால் முடி நன்கு வேகமாக வளரும்.


  • உருளைக்கிழங்கை வேக வைத்த தண்ணீரைக் கொண்டு, வாரம் ஒருமுறை முடியை அலசுங்கள். இதனால் அதில் உள்ள இயற்கையான ஸ்டார்ச் முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

  • முடியின் அடர்த்தியை அதிகரிக்க வேண்டுமானால், நறுமணமிக்க எண்ணெய்களான லாவெண்டர் ஆயில், ரோஸ்மேரி ஆயில் போன்றவற்றைக் கொண்டு, வாரம் ஒருமுறை முடியை மசாஜ் செய்ய வேண்டும்.

  • வெங்காயத்தை நீரில் போட்டு வேக வைத்து, பின் அந்த நீரினால் முடியை அலசலாம் அல்லது வெங்காயத்தை சாறு எடுத்து அதனைக் கொண்டும் முடியை மசாஜ் செய்து ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலசலாம். இதன் மூலம் முடியின் வளர்ச்சி மற்றும் அடர்த்தி அதிகரிக்கும்.   

  • மாதம் ஒருமுறை ஒரு டம்ளர் பீரைக் கொண்டு, ஸ்கால்ப்பை நன்கு மசாஜ் செய்து வந்தால், மயிர்கால்கள் வலிமையடைந்து, முடி நன்கு அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.  

  • வினிகரை நீரில் கலந்து, பின் அந்த கலவையைக் கொண்டு ஸ்கால்ப் மற்றும் முடியை அலசினால், முடியானது பொலிவோடும், மென்மையாகவும் இருக்கும்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்