நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உடற்பயிற்சி செய்வது ஏன் அவசியம்?

 உடற்பயிற்சி என்பது எமது உடல் நலத்தினை ஆரோக்கியமான நிலையில் பேணுவதற்கு உதவுகின்ற செயற்பாடுகளுள் ஒன்றாகும்.

நடத்தல், ஓடுதல், நீந்துதல்,குதித்தல், விளையாடுதல், நடனமாடுதல் மற்றும் யோகாசனம் செய்தல் போன்ற அனைத்து உடலசைவுகளும் உடற்பயிற்சிகளே.

தினசரி நாம் 45 நிமிடம் 1 மணித்தியாலம் உடற்பயிற்சி செய்தல் வேண்டும். இதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கின்றன. அந்தவகையில் உடற்பயிற்சியால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். 


  • உடல் உறுப்புகளின் சீரான செயல்பாட்டுக்கும், நல்ல நிலையில் வைத்துக் கொள்வதற்கும் உதவுகிறது.

  • உடற்பயிற்சி செய்வதன் மூலம் தசைகள் நன்றாக விரிவடையும். உடலில் சோர்வு நீங்கும், மனதில் உற்சாகம் பிறக்கும்.

  • நிம்மதியான தூக்கம் வரும். உடற்பயிற்சி செய்வது எந்தப் பக்கவிளைவையும் தராது.

  •  தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்களுக்குப் புற்றுநோய் வரும் வாய்ப்புகள்கூட குறையும்

  • வாரத்துக்கு மூன்று மணி நேரம் நடந்தால், மாரடைப்பைத் தடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறது ஓர் ஆராய்ச்சி. மாரடைப்பு மட்டுமல்ல, பல்வேறு நோய்கள் வருவதற்கான வாய்ப்பும் வெகுவாகக் குறையும்.

  • ரத்த ஓட்டம் சீராகும், உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும், மற்றவர்களுடன் உரையாடியபடியே நடக்கும்போது மனதிலும், உடலிலும் உற்சாகம் பிறக்கும்.

  • தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்களுக்கு எடை கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது, உடலில் கொழுப்பு சேர்வதில்லை

  • வாகன வசதி, பொது போக்குவரத்து வசதி குறைந்த அந்நாட்களில், பலருக்கும் கால்களே பயண உபகரணங்களாக இருந்தன. அதனால் நோய், நொடிகளும் குறைந்தன.

  • அதிகாலை வேளையில் எழுவதே நல்ல விஷயம் தான். காலையில் உடற்பயிற்சி செய்யும் வழக்கம் உள்ளவர்களுக்கு, அதிகாலையில் எழும் பழக்கமும் ஏற்படுகிறது

  • காலை வேளையில் சுத்தமான காற்றைச் சுவாசிக்க முடிகிறது. உடற்பயிற்சியால் உள்ளுக்குள் செல்லும் பிராணவாயுவின் அளவு அதிகரிக்கிறது .




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!