நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மதிய உணவுக்கு ராஜ்மா கிரேவி... இப்படி செஞ்சா ஒரு பருக்கை கூட மிஞ்சாது...

 ராஜ்மா ரெசிபி...


மதிய உணவுக்கு சுவை மிகுந்ததாக ஏதாவது சமைக்க வேண்டும் என நினைத்தால் இந்த ராஜ்மா கிரேவி செய்து பாருங்கள். எப்படி செய்ய வேண்டும் என தெரியாதா..?இதோ ரெசிபி...

தேவையான பொருட்கள் :

வேக வைக்க

ராஜ்மா - 1 கப்

பிரிஞ்சு இலை - 1

பட்டை - 1

உப்பு -1 tsp

சமைக்க

நெய் - 1 1/2 tbsp

பட்டை - 1 துண்டு

கிராம்பு - 3

சீரகம் - 1/2 tsp

வெங்காயம் - 1

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 tsp

பச்சை மிளகாய் - 1

தக்காளி - 2

மஞ்சள் - 1/4

மிளகாய் தூள் - 1 tsp

தனியா தூள் - 1 tsp

சீரகத்தூள் - 1 /2 tsp

மேங்கோ பொடி - 1/2 tsp

கரம் மசாலா - 1/2 tsp

உப்பு - 1/2 tsp

கசூரி மேத்தி - 1 tsp

கொத்தமல்லி - சிறிதளவு


செய்முறை :

ராஜ்மாவை இரவு ஊற வைத்துவிடுங்கள். 12 மணி நேரம் ஊற வேண்டும்.

மறுநாள் குக்கரில் போட்டு பட்டை, இலை, உப்பு சேர்த்து 6 விசில் வர வேக வையுங்கள். தண்ணீர் கொட்டை மூழ்கும் வரை ஊற்றினால் போதும்.

வெந்ததும் தனியா வைத்துவிடுங்கள்.

சமைக்க கடாய் வைத்து நெய் விட்டு பட்டை , கிராம்பு , சீரகம் சேர்த்து பொறித்ததும் வெங்காயம் , இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்குங்கள். தக்காளி வதங்கி சுருங்கியதும் கொடுக்கப்பட்ட பொடிகள் அனைத்தையும் சேர்த்துகொள்ளுங்கள்.

சிறிது நேரம் வதக்கியதும் வேக வைத்த ராஜ்மாவை தண்ணீருடன் அப்படியே ஊற்றுங்கள். பின் கலக்கிவிட்டு உப்பு சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

பின் தட்டுபோட்டு மூடி 5 நிமிடங்களுக்கு கொதிக்க வையுங்கள். தண்ணீர் வற்றி குழம்பு பதத்திற்கு கெட்டியானதும் கசூரி மேத்தியை கையில் கசக்கிப் போட்டு பின் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் ராஜ்மா குழம்பு பஞ்சாபி சுவையில் தயார். இதை சப்பாத்தி, சாதம் என எதற்கும் சாப்பிடலாம்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!