நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Chewing gum ஐ வைத்து வித்தியாசமான முறையில் பணம் சம்பாதிக்கும் பெண் - எப்படி?

 ஜெர்மனியை சேர்ந்த ஒரு பெண் நாம் அவ்வப்போது உண்ணும் chewing gum-ஐ வைத்து, வித்தியாசமான முறையில் பணம் சம்பாதித்து வருகிறார். இவரது இந்த ஐடியா இணையதளத்தில் இவருக்கென்று தனியாக ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளது


ஜெர்மனியைச் சேர்ந்த ஜூலியா, தனது வாழ்க்கையின் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்காக புதிய வழியினை கண்டுபிடித்துள்ளார்.

அதுதான் Chewing Gum மென்று அதன் மூலம் bubbles களை உருவாக்குவது. கேட்பதற்கு தலை சுற்றலாம், ஆனால் அதுதான் உண்மை.

ஜூலியா Chewing Gum மென்று அதில் பெரிய bubble களை உருவாக்கி தனது நண்பர்களுக்கு வேடிக்கை காண்பிப்பார்.


ஒரு நாள் அவரது நண்பர் பேசாமல் உனது சூவிங் கம் bubbles ஐ புகைப்படம் எடுத்து விற்றால் என்ன? என்று நகைச்சுவையாக ஜூலியாவிடம் கூற அதனையே லட்சியமாகக் கொண்டு சில முயற்சிகளை மேற்கொண்டார்.

அதன் பிறகு Chewing Gum bubble களை பெரிதாக ஊதி அதனை புகைப்படம் எடுத்து ஆன்லைனில் வெளியிட்டார்.


பிறகு ஜூலியாவிற்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உருவாக , தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் உள்ள ஆதரவாளர்கள் கேட்கும் அளவிற்குப் பெரிய bubbles உருவாக்கி இந்திய மதிப்பில் மாதம் ரூ 67,000 வரை பணம் சம்பாதிப்பதாகக் கூறுகிறார்.

இன்ஸ்டகிராமில் bubbles ஊத சொல்லி வரும் சாவல்கள் தனக்கு பிடித்துள்ளதாகவும், தனது ரசிகர்கள் மிகவும் ஆதரிப்பதாகவும் மகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஜூலியா.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்