நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தொடை பகுதியில் சேரும் கொழுப்பை குறைக்கும் வேண்டுமா? இந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்தாலே போதும்.....

 பொதுவாக நம்மில் சிலருக்கு தொடை பகுதியில் கொழுப்பு படிந்து காணப்படும்.

அவை ‘சாடில் பேக்குகள்’ என்று அழைக்கப்படுகின்றன. ஆண்களை விட பெண்களுக்குத்தான் தொடை பகுதியில் கூடுதல் கொழுப்புகள் சேரும்.

இந்த கொழுப்பை கரைப்பது சற்று கடினமானது. இருப்பினும் சில எளிய பயிற்சிகள் மூலம் கொழுப்பு கரைத்து விடலாம்.

தற்போது அவற்றில் சிலவற்றை இங்கே எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.  


ஒற்றை கால் பயிற்சி



  • யோகா விரிப்பில் நேராக படுத்துக்கொள்ள வேண்டும். பின்பு இரு கால்களையும் மடக்கிய நிலையில் தரையில் ஊன்றிக்கொள்ள வேண்டும்.

  • பின்பு இடது கால் பகுதியை மட்டும் மேல் நோக்கி உயர்த்தி 5-7 வினாடிகள் நேராக வைத்திருந்து பின்பு கீழே தாழ்த்தி இயல்பு நிலைக்கு வரவேண்டும்.

  • இவ்வாறு தொடர்ந்து சில நிமிடங்கள் பயிற்சி செய்ய வேண்டும்.

  • பின்பு இடது காலுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு வலது காலை மேலே உயர்த்தி பயிற்சியை தொடர வேண்டும். இவ்வாறு தினமும் 10 முதல் 15 முறை பயிற்சி செய்து வரலாம். 

சாய்ந்த நிலை பயிற்சி


  • தரை விரிப்பில் ஒரு பக்கமாக சாய்ந்த நிலையில் படுத்துக்கொள்ள வேண்டும்.

  • பின்பு மேல் பகுதியில் இருக்கும் காலை நன்றாக உயரே உயர்த்தி சில விநாடிகள் வைத்திருந்து கீழே இறக்கி இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்.

  • அவ்வாறு சில நிமிடங்கள் தொடர்ந்து பயிற்சி செய்து வரலாம். இந்த பயிற்சியின் மூலம் தொடை பகுதியில் கொழுப்பு சேர்வது தவிர்க்கப்படும். கொழுப்பு சேர்ந்திருந்தாலும் கரையத் தொடங்கும்.

இடுப்பு பயிற்சி


  • தரை விரிப்பில் ஒரு பக்கமாக சாய்ந்த நிலையில் உட்கார்ந்து கொள்ள வேண்டும்.

  • பின்பு முழங்கையை தரையில் அழுத்தமாக ஊன்றிவிட்டு இடுப்பையும், ஒரு காலையும் மேல் நோக்கி உயர்த்த வேண்டும்.

  • அப்போது கால் பகுதி நேரான நிலையில் இருக்க வேண்டும்.

  • சில விநாடி கள் அதே நிலையில் வைத்துவிட்டு இடுப்பை கீழே இறக்கி தரையில் பதியவைத்து இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு தினமும் 15 முறை பயிற்சி செய்து வரலாம். 




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்