நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மீனின் நாக்கை காலி செய்து புது நாக்காகவே மாறிய விசித்திர உயிரினம்! ஷாக்கான ஆராச்சியாளர்கள்...

 அமெரிக்காவில் மீனின் வாய்க்குள் நுழைந்து, நாக்கை உண்டு காலி செய்து, உயிர் வாழும் விசித்திர ஒட்டுண்ணி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியா - இங்கிலாந்து நாட்டின் சபோல்க் நகரில் இறக்குமதி செய்யப்பட்ட மீன்கள் அடங்கிய பெட்டியில் ஒரு மீனின் வாய் விசித்திரமுடன் காணப்பட்டு உள்ளது.

ஆய்வில் வெளிவந்த ஆச்சரியம்

அதனை ஆய்வு செய்ததில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது.

அந்த மீனின் வாயில் நாக்கு இருப்பதற்கு பதிலாக ஒட்டுண்ணி ஒன்று அமர்ந்திருந்துள்ளது. இது சிமோதோவா எக்சிகுவா அல்லது நாக்கை உண்ணும் பேன் என விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் ஒரு ஒட்டுண்ணியாகும்.

குறித்த ஒட்டுண்ணி முதலில் மீனின் சுவாச பகுதி வழியே வாய் பகுதிக்குள் நுழைந்து உள்ளது.

அதன்பின்னர் மீனின் நாக்கை மெல்ல உண்ண தொடங்கி உள்ளது. நாக்கில் உள்ள இரத்த குழாய்களை துண்டித்து உளளது.

இதில், நாளடைவில் நாக்கு துண்டாகி விழுந்து விட்டது. மீதமுள்ள நாக்கு பகுதியில் தன்னை இணைத்து கொண்டு, மீனின் புதிய நாக்கு போன்று உருமாறி உள்ளது.

மீனின் புதிய நாக்கு

இதன்பின்பு, மீனின் கோழையை உண்ண ஆரம்பித்து உள்ளது.

ஒட்டுண்ணி ஒன்று அது சார்ந்திருக்கும் உயிரினத்தின் உறுப்பு ஒன்றை காலி செய்து, அதற்கு மாற்றாக தன்னை நிலைநிறுத்தி கொள்வது என்பது இதுவரையில் தெரிந்த ஒரே ஒரு நிகழ்வு என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு வளைகுடா பகுதியில் இந்த ஒட்டுண்ணி கண்டறியப்பட்டு உள்ளது. ஒருவேளை இந்த ஒட்டுண்ணி மனிதர்களுக்குள் சென்றால் தீங்கு ஏதும் விளைவிக்காது என கூறப்படுகிறது.

எனினும், இங்கிலாந்தில் இறக்குமதி செய்யப்பட்ட அந்த மீன் பெட்டியை ஏற்க மறுத்து, நிராகரித்து விட்ட கடலோர துறைமுக சுகாதார கழகம், அதனை எந்த நாட்டில் இருந்து வந்ததோ அந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பி விட்டது.



ALSO READ : பாகுபலி ராஜமாதா போல் தனது குழந்தையை மக்களுக்கு காட்டிய கொரில்லா - வைரல் வீடியோ...

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்