நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஞாபக சக்தியை அதிகரிக்கணுமா? இந்த மூலிகைகளை இப்படி எடுத்துகோங்க போதும்!

 பொதுவாக இன்றைய காலத்தில் மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரும் பொதுவான பிரச்சனைகளில் ஞாபக சக்தி குறைபாடும் ஒன்று.

இதற்கு காரணம் மூளை நரம்புகள் வயது முதிர்ச்சியாலும், போதிய சக்தியின்மையாலும், மன அழுத்தத்தினாலும் சோர்வடைவதே இதற்கு காரணம்.

இதன் காரணமாக, மூளை சரியாக எதையும் ஞாபத்தில் வைத்துக் கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறது.

எந்த ஒரு முக்கியமான வேலையை செய்ய நினைத்தாலும், அதனை உடனே மறந்து விடும். ஞபக சக்தி குறைபாடுகளுக்கு, சரியான உணவுகளை சாப்பிடாததும் ஒரு காரணமாகும்.

அந்தவகையில் ஞபக சக்தியை எளிய முறையில் அதிகரிக்க என்ன மாதிரியான உணவுகளை எடுத்து கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.


  • வல்லாரை இலையை நசுக்கி கூடவே நெல்லிக்காயும் சேர்த்து, தேன் கலந்து கொடுக்க வேண்டும். இதை அதிகாலையில் குடிப்பது நல்ல பலன் தரும். இது மூளையை சிறப்பாக வைத்திருக்க உதவும். வல்லாரைக்கு ஞாபகசக்தியை அதிகரிக்கும் தன்மை இருக்கும்.

  • நெல்லிக்காயும் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. இதை பவுடராக்கி தேனில்கலந்து குடிக்கலாம். இல்லையெனில் அப்படியேவும் சாப்பிடலாம், ஜூஸாக்கி பாலில் கலந்தும் குடிக்கலாம்.

  • நீர் பிரம்மி நினைவாற்றலை அதிகரிக்க உதவும். இதை தேனுடன் கலந்து குடிக்கலாம். இது நினைவாற்றலை மட்டுமல்லாமல், கவனச் சிதறலையும் கூட சரி செய்யும்.

  • அமுக்குரான் பொடி மருத்துவத்தில் பிரபலமானது. இதை பசும்பாலுடன் கலந்து குடிக்கலாம். இது மூளையை சிறப்பாக செயல்பட வைக்கிறது.

  •  துளசியை  நீரில் கொதிக்க வைத்து டீயாக குடிக்கலாம். இது மன நலன் பாதித்தவர்களுக்கான சிகிச்சை முறையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தினசரி ஒரு டீஸ்பூன் பவுடரை பாலில் கலந்து குடிக்கலாம்.

  • இரட்டை மதுரம் வேரைக் கொஞ்சம் பொடியாக்கி, அதில் இஞ்சி, கடுகு, சீரகம், உள்ளிட்டவற்றைக் கலந்து பொடியாக்கி கால் டீஸ்பூன் அளவு எடுத்து 5 கிராம் பசும் நெய்யைக் கலந்து சாப்பிட வேண்டும். இது பவுடராகவும் கடையில் கிடைக்கும்.  




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்