கேட்ட பார்த்தாலே பயமா இருக்கே... இது உலகின் கொலைகார தோட்டம்
- Get link
- X
- Other Apps
பூந்தோட்டம், மலர் தோட்டம், இப்படி பல தோட்டங்களை கேள்விப்பட்டிருப்போம், ஆனால், கொலை கார தோட்டம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா... அது குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் இதோ...
- இங்கிலாந்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
- பார்வையாளர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்கள் தகவல் களஞ்சியங்களாக உள்ளன. இவற்றில் நமக்கு கிடைக்கும் தகவல்கள் சில சமயங்களில் வியப்பை தருவதாகவும், சில சமயங்களில் அதிர்ச்சி தருவதாகவும் உள்ளது. தோட்டம் என்றால், நம் மனதில் உடனே தோன்றுவது, அழகான பூக்கள் நிறைந்த, அமைதியான, மனதிற்கு இதமான இடம். ஆனால், இங்கே நாம் காணும் தோட்டம், மனதிற்கு, அமைதிய வழங்கும் தோட்டம் அல்ல. பீதியை உண்டாக்கும் தோட்டம்.
ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 600,000 மக்கள் தோட்டத்திற்கு வருகை தருகின்றனர் எனவும், மேலும் வழிகாட்டியுடன் மட்டுமே சுற்றிப்பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள் எனவும் தோட்டத்தை பராமரிக்கும் அதிகாரிகளின் கூறுகின்றனர். சுற்றுலாப் பயணிகளைத் தவிர, உலகம் முழுவதிலுமிருந்து தாவரவியலாளர்களும் இங்கே வருகை தருகின்றனர். ஆனால் பலத்த எச்சரிக்கைகள் விடுத்துள்ள போதிலும், சிலர் இந்த கொடிய தாவரங்களின் செடிகளை, பூக்களை முகர்ந்து பார்த்து, அதன் நச்சுப் புகையை சுவாசித்து மயக்கமடைகின்றனர் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த தோட்டம் 2005 ஆம் ஆண்டில் நார்தம்பர்லேண்டின் டச்சஸ் ஜேன் பெர்சி என்பரால் கற்பனை செய்யப்பட்டது என கூறப்படுகிறது.
ALSO READ : ஒரு லிட்டர் தேள் விஷம் 80 கோடி ரூபாய் - எங்கே?
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment